VidaaMuyarchi: லியோ விஜய்க்குப் போட்டியாக அஜித்... விடாமுயற்சியில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்
சென்னை: அஜித்தின் ஏகே 62 படத்தின் அப்டேட்க்காக ரசிகர்கள் பல நாட்கள் எதிர்பார்த்திருந்தனர்.
அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக ஏகே 62 படத்தின் டைட்டிலை படக்குழு அறிவித்திருந்தது.
அதன்படி, லைகா தயாரிக்கும் இந்தப் படத்திற்கு விடாமுயற்சி என்ற டைட்டில் கன்ஃபார்ம் ஆகியுள்ளது.
இந்நிலையில், விடாமுயற்சி படத்தில் அஜித் கேரக்டர் பற்றிய அப்டேட் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

லியோ விஜய் ஸ்டைலில் அஜித்:அஜித்தின் ஏகே 62 பட டைட்டில் அப்டேட் அவரது பிறந்தநாள் தினத்தில் வெளியானது. அதன்படி, ஏகே 62 படத்துக்கு விடாமுயற்சி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. லைகா தயாரிக்கும் இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்குவதும் உறுதியாகியுள்ளது. முன்னதாக இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவிருந்தது குறிப்பிடத்தக்கது.
விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து லைகா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளதாம். இதனால், நேபாளம், பூடான் நாடுகளுக்கு பைக் டூர் சென்றிருந்த அஜித், தற்போது சென்னை திரும்பிவிட்டாராம். மொத்தமே 70 முதல் 90 நாட்களுக்குள் விடாமுயற்சி படப்பிடிப்பை முடித்துவிட மகிழ் திருமேனி பிளான் செய்துள்ளாராம்.
இதன் காரணமாக விடாமுயற்சி படப்பிடிப்பு முடியும் வரை அஜித் பைக் ட்ரிப் செல்ல வாய்ப்பில்லை என தெரிகிறது. அதேநேரம் இந்தப் படத்திற்காக அஜித் தனது கெட்டப்பை மாற்ற முடிவு செய்துள்ளாராம். கடந்த சில வருடங்களாகவே தான் நடித்த படங்களில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வருவதை வழக்கமாக வைத்துள்ளார் அஜித். ஆனால், இந்தப் படத்தில் அஜித்தின் லுக் வேற லெவலில் இருக்கும் என சொல்லப்படுகிறது.

இதுவரை தனது கெட்டப்பை அதிகம் மாற்றாத விஜய், மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து லியோவில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடிக்கிறார். அதனால், விஜய்க்குப் போட்டியாக சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிற்கு எதிராக ஸ்மார்ட் கெட்டப்பில் நடிக்கவுள்ளாராம் அஜித். அதன்படி, தாடி இல்லாமல் டை அடிக்கப்பட்ட தலை முடியுடன் என்ட்ரி கொடுக்க அஜித் பிளான் செய்துள்ளாராம்.
அதுமட்டும் இல்லாமல் அஜித்தின் ஹேர் ஸ்டைலையும் மாற்ற மகிழ் திருமேனி முடிவு செய்துள்ளாராம். தரமான ஆக்ஷன் படமாக உருவாகவுள்ள விடாமுயற்சி, அஜித் ரசிகர்களுக்கு செம்ம மாஸ் ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகிழ் திருமேனி கேட்ட பட்ஜெட்டை ஒதுக்கிய லைகா, அஜித்துக்காக இன்னும் எது வேண்டுமானாலும் செய்யலாம் என க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டாராம். இதனால், விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி பெறும் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











