VidaaMuyarchi: "விடாமுயற்சி இண்டஸ்ட்ரி ஹிட் கன்ஃபார்ம்..” தம்ஸ் அப் காட்டி அஜித் கொடுத்த சிக்னல்!

சென்னை: அஜித்தின் 62வது படமான விடாமுயற்சி அசுர வேகத்தில் உருவாகி வருகிறது. மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் விடாமுயற்சி படம், கண்டிப்பாக இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்கும் என அஜித்தே தம்ஸ் அப் செய்து சிக்னல் கொடுத்துள்ளது வைரலாகி வருகிறது.

அஜித் கொடுத்த சிக்னல்
துணிவு வெற்றியை தொடர்ந்து அஜித் தனது 62வது படத்தில் நடித்து வருகிறார். விடாமுயற்சி என்ற டைட்டிலில் உருவாகி வரும் இந்தப் படம் ஏப்ரல் இறுதி அல்லது மே 1ம் தேதி வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகி வருகிறது. அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

 VidaaMuyarchi: Ajith with Aarav in VidaaMuyarchi shooting spot from Azerbaijan

விடாமுயற்சி படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கியது. இதுவரை முடிந்துள்ள மூன்று ஷெட்யூலும் அஜர்பைஜானில் தான் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விடாமுயற்சி ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. அதன்படி முதலில் அஜித்தின் போர்ஷன் முழுவதையும் முடித்துவிட மகிழ் திருமேனி பிளான் செய்துள்ளாராம். இந்நிலையில் விடாமுயற்சி ஸ்பாட்டில் இருந்து வெளியான போட்டோ வைரலாகி வருகிறது.

 VidaaMuyarchi: Ajith with Aarav in VidaaMuyarchi shooting spot from Azerbaijan

விடாமுயற்சி படத்தில் இருந்து எதாவது அப்டேட் வராதா என ரசிகர்கள் ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், அஜித் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மட்டுமே அடிக்கடி வெளியாகின. மற்றபடி தப்பித்தவறி கூட விடாமுயற்சி அப்டேட் வரவே இல்லை. இந்நிலையில் இந்தப் படம் எப்படி இருக்கும் என்பதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. இது எல்லாத்துக்கும் சேர்த்து தான் இப்போது அஜித்தின் செம்ம மாஸ்ஸான போட்டோ வெளியாகியுள்ளது.

விடாமுயற்சி படப்பிடிப்பின் நடுவில் அஜர்பைஜானில் ஜாலியாக ரவுண்ட் அடித்து வருகிறார் அஜித். அப்போது அவருடன் நடிகர்கள் ஆரவ், நிகில் ஆகியோர் புகைப்படம் எடுத்துள்ளனர். அஜித், ஆரவ் மட்டும் ஒரு போட்டோவும், மூவருமாக இணைந்து ஒரு போட்டோவும் எடுத்துள்ளனர். எப்போதுமே க்யூட்டான புன்னகையுடன் மட்டுமே போட்டோவுக்கு போஸ் கொடுப்பார் அஜித். ஆனால், இதில் ரசிகர்களுக்கு செம்ம வைப் கொடுத்துள்ளார்.

 VidaaMuyarchi: Ajith with Aarav in VidaaMuyarchi shooting spot from Azerbaijan

ஆரவ், நிகில் இருவரது நடுவில் இருக்கும் அஜித், தனது இரண்டு கட்டை விரல்களை உயர்த்தி தம்ஸ் அப் காட்டுகிறார். விடாமுயற்சி படம் மீதான நம்பிக்கையில் கண்டிப்பாக இந்த மூவி இண்டஸ்ட்ரி ஹி அடிக்கும் என அல்டிமேட்டாக சிக்னல் கொடுத்துள்ளதை போல இருக்கிறது. ரசிகர்களும் கமெண்ட்ஸில் விடாமுயற்சி படம் மீதான அஜித்தின் நம்பிக்கையை இந்த போட்டோவில் பார்க்க முடிவதாக பதிவிட்டு வருகின்றனர். மேலும், இந்த போட்டோவையும் டிவிட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X