Ajithkumar: விஜய் மகனுக்கு அஜித் செய்த உதவி.. இப்பத்தான் ஜேசன் சஞ்சய் மனசுல நிம்மதி வந்துருக்கு!

சென்னை: தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களாக இருந்த இருவர் தற்போது, சினிமாவில் இருந்து விலகி தங்களது மனதில் இருந்த நீண்ட நாள் ஆசையை, கனவை நோக்கி ஓடிக்கொண்டு உள்ளார்கள். இதில் விஜய் சினிமாவில் இருந்து முற்றிலுமாக விலகப்போவதாக அறிவித்துவிட்டார். ஆனால், அஜித் தெரிவித்துள்ளது ரசிகர்களுக்கு நிம்மதியைக் கொடுத்தாலும், விரைவில் அவரும் சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகிவிடுவார் என கூறப்படுகின்றது. இப்படியான நிலையில் நடிகர் அஜித்குமார், விஜய் மகன் ஜேசன் சஞ்சய்க்கு உதவி செய்துள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

நடிகர் அஜித் நடிப்பில் இந்த ஆண்டு இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த இரண்டு படங்களும் ஏப்ரல் மாதத்திற்குள்ளாகவே ரிலீஸ் ஆகவுள்ளது. இதில் குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது. ஏப்ரல் 14ஆம் தேதி குட் பேட் அக்லி படத்தை ரிலீஸ் செய்தால், படம் ரிலீஸ் ஆகி இரண்டு வாரங்களில் அஜித்தின் பிறந்த நாள் வருகின்றது. எனவே பிறந்த நாளிலும் கலெக்‌ஷனை அள்ளிவிடலாம் என படக்குழு திட்டமிட்டு படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்திருப்பதாக ஒரு பேச்சு உள்ளது.

ajithkumar jason sanjay vijay son ajithkumar racing

குட் பேட் அக்லி ரிலீஸ் தேதி உறுதியாகிவிட்டதால், மற்றொரு படமான விடாமுயற்சி படம், ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரி இரண்டாவது வாரத்திற்குள் ரிலீஸ் செய்ய படக்குழு முயற்சி செய்து வருவதாக கூறப்படுகின்றது. கூடுமானவரை குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதிக்கு சுமார் 50 நாட்கள் முன்னாலே, விடாமுயற்சி படத்தை ரிலீஸ் செய்துவிட படக்குழு முயற்சித்து வருவதாகவும், அஜித் தரப்பில் இருந்தும் அதுபோலத்தான் கூறப்பட்டது எனவும் கூறப்படுகின்றது.

அஜித் வெற்றி: அஜித் வரும் அக்டோபர் மாதம் வரை கார் ரேஸில்தான் தனது முழு கவனத்தினை செலுத்தவுள்ளார். எனவே, இரண்டு படங்களிலும் தனது பணிகளை முழுவதுமாக முடித்துக் கொடுத்துவிட்டார். எனவே படக்குழுவினர் நிம்மதியாக உள்ளனர். கார் ரேஸின் முதல்கட்டமாக, துபாயில் நடைபெற்ற 24 மணி நேர கார் பந்தயத்தில் அஜித்குமாரின் அஜித்குமார் ரேஸிங் அணி, R பிரிவில் மூன்றாவது இடத்தினை வென்று அசத்தியது. எனவே அஜித்குமாருக்கும் அவரது அணியினருக்கும் இந்தியா மட்டும் இல்லாமல், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து டன் கணக்கில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றது.

ajithkumar jason sanjay vijay son ajithkumar racing

விஜய் மகன்: இப்படியான நிலையில், நடிகர் அஜித்குமார், விஜய் மகன் ஜேசன் சஞ்சய்க்கு மிகவும் முக்கியமான உதவியைச் செய்துள்ளார். அதாவது ஜேசன் சஞ்சய், இயக்குநராக முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றார். இவரது இயக்கத்தில் உருவாகும் படத்தினை லைகா நிறுவனம் தயாரிக்க முன் வந்து ஒப்பந்தம் போடப்பட்டது. படத்தில் நடிகராக சந்தீப் கிஷன் நடிக்கவுள்ளார் என கூறப்படுகின்றது. ஒப்பந்தம் போட்ட பின்னர், லைகா விஜய் மகனின் படத்தைக் கண்டுகொள்ளவில்லையாம்.

ajithkumar jason sanjay vijay son ajithkumar racing

நிம்மதி: இப்படியான நிலையில், ஜேசன் சஞ்சய், அஜித்குமாரின் மேலாளர், சுரேஷ் சந்திராவுக்கு போன் போட்டு லைகா குறித்து பேசியுள்ளார். அப்போது அருகில் இருந்து அஜித் போனை வாங்கி, ஜேசன் சஞ்சயிடம் நீண்ட நேரம் பேசியுள்ளார். குறிப்பாக அஜித் ஜேசன் சஞ்சய்க்கு வாழ்த்து கூறியது மட்டும் இல்லாமல், பல்வேறு அறிவுரைகளையும் வழங்கியுள்ளார். இதற்கிடையில் ஜேசன் சஞ்சய், லைகா குறித்து அஜித்திடம் பேசியுள்ளார். அதன் பின்னர் அஜித், லைகா ஒத்துவந்தால் பார், இல்லை என்றால் வேறு நல்ல தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளது அவற்றிடம் நான் பேசுகின்றேன் எனக் கூறி நம்பிக்கை கொடுத்துள்ளார். அஜித்திடம் பேசிய பின்னர்தான் ஜேசன் சஞ்சய்க்கு, கொஞ்சம் நிம்மதியாக உள்ளதாம். விஜய் மகனுக்கு அஜித் உதவி செய்ய முன் வந்திருப்பது திரைத்துறையிலேயே பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X