Ajith: அஜித் கார் ஓட்டிப் பழக விடாமுயற்சி படம் எடுத்தாங்களா? பிஸ்மியின் பேச்சால் ரசிகர்கள் கோபம்!
சென்னை: அஜித் குமார் நடிப்பில் வெளியாகியுள்ள விடாமுயற்சி படம் குறித்த பேச்சுகள் தான் திரையுலகிலும், அதனைச் சுற்றிலும் பரவலாக பேசப்படும் விஷயமாக உள்ளது. விமர்சகர்களில் ஒரு பிரிவினர், படம் நன்றாக உள்ளது என்கின்றனர். ஒரு சிலர் படம் சுமார் என்கின்றனர். ஒரு சிலர் படம் தோல்வி என்கின்றனர். இப்படியான நிலையில், விடாமுயற்சி படம் குறித்து பேசும்போது வலைப்பேச்சு பிஸ்மி அஜித் குறித்து பேசினார். அவரது பேச்சில் அஜித்தின் கார் ஓட்டும் திறமை குறித்து பிஸ்மி கமெண்ட் அடித்தது, அஜித் ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 6ஆம் தேதி, லைகா தயாரிப்பில், அஜித், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான படம் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கிய இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். அஜித் நடிப்பில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ரிலீஸ் ஆன படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இந்தப் படத்திற்கு கிடைத்தது. 1997 ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படமான பிரேக் டவுன் படத்தின் தழுவல்தான் இந்தப் படம்.

படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை தான் பெற்று வருகிறது. இது படத்தின் வசூலிலும் எதிரொலித்து வருகிறது. இப்படியான நிலையில் வலைபேச்சு யூடியூப் பக்கத்தில், நேற்று அதாவது பிப்ரவரி 7ஆம் தேதி வெளியிடப்பட்ட வீடியோவில், விடாமுயற்சி படத்தின் வசூல் குறித்து பேசினார்கள். அப்போது அஜித் கார் ஓட்டுவது குறித்து, பிஸ்மி கமெண்ட் செய்தார். அது அஜித் ரசிகர்களை கோபமடையச் செய்துள்ளது.
அஜித் - பிஸ்மி: அதாவது அந்த வீடியோவில், " அந்தணன் பேசும்போது, அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவின் பேட்டி குறித்து குறிப்பிடுகின்றார். அதாவது, விடாமுயற்சி படம் ஏன் செய்தோம் என அஜித் ஒரு காரணம் கூறுகிறார் என அந்தணன் கூறுகிறார். அதற்கு உடனே பிஸ்மி, ' நான் கார் ஓட்ட பழகிக்கனும்' அதாவது அஜித் கார் ஓட்டிப் பழகிக் கொள்ள விடாமுயற்சி படத்தை எடுத்துள்ளார்கள் என பொருள்படும் படி கமெண்ட் அடித்தார். அந்தணன் அந்த கருத்தை மறுத்து விட்டு மேற்கொண்டு பேசத் தொடங்கினார்".

கார் ரேஸ்: இதில் அஜித் குறித்து அதுவும் அவர் கார் ஓட்டுவது குறித்து, பிஸ்மியின் கமெண்ட் அஜித் ரசிகர்களை கோபமூட்டி உள்ளது. அஜித் நடிகர் மட்டும் இல்லாமல், கார் ரேஸ் மற்றும் பைக் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டவர். மேலும் பைக்கில், பல நாடுகளுக்கு டிரிப் அடிப்பவர். தற்போது தனது பெயரில் அதாவது, அஜித் குமார் ரேஸிங் என்ற பெயரில் கார் ரேஸ் நிறுவனத்தை தொடங்கி, அதில் சாதனைகளையும் படைத்து வருகிறார். கடந்த மாதம் துபாயில் நடைபெற்ற 24 மணி நேர கார் பந்தயத்தில் அவரது அணி, தனிப்பட்ட பிரிவில் மூன்றாவது இடம் பிடித்து சாதனை படைத்தது. நாட்டிற்கே பெருமை சேர்த்தார் என்றுதான் கூறவேண்டும்.

கண்டனம்: மேலும் படங்களில் கார் ரேஸ் காட்சிகள் என்றாலும் சரி, கார் ரேஸில் ஸ்டண்ட் காட்சிகள் என்றாலும் சரி, டூப் போட்டு மற்றவர்களை நடிக்க விடாமல், அவரே, நடிக்கிறார். அவரது கார் ஓட்டும் திறமை குறித்து, பலரும் அறிந்ததுதான். பில்லா, மங்காத்தா, ஆரம்பம் என வரிசைப்படுத்தலாம். இப்படியான நிலையில், அஜித் கார் ஓட்டிப் பழகத்தான் விடாமுயற்சி படத்தில் நடிக்க காரணம் என பிஸ்மி கமெண்ட் அடித்ததால், அஜித் ரசிகர்கள் இணையத்தில் பிஸ்மியின் பேச்சை கண்டித்து பதிவிட்டு வருகிறார்கள்.



Click it and Unblock the Notifications











