VidaaMuyarchi: அஜித்தின் ரியல் சம்பவம்... ரிலீஸுக்கு முன்பே 250 கோடி வசூல் செய்த விடாமுயற்சி!
சென்னை: அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இன்னும் படப்பிடிப்பு முடியாத நிலையில் விடாமுயற்சி சாட்டிலைட் ரைட்ஸ், ஓடிடி ரைட்ஸ் பிஸினஸ் 250 கோடிக்கு நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரிலீஸுக்கு முன்பே விடாமுயற்சி 250 கோடி வசூல்: கோலிவுட்டின் மாஸ் ஹீரோக்களில் அஜித்துக்கு ரசிகர்களிடம் எப்போதுமே பெரிய கிரேஸ் உண்டு. தனது ரசிகர் மன்றங்களை கலைத்துவிட்ட பின்னரும் அஜித் படங்களுக்கு முதல் நாளில் தரமான ஓபனிங் கிடைத்து வருகிறது. அதேபோல் அவர் பொது நிகழ்ச்சிகள், சினிமா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருந்தாலும், அஜித்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்தாண்டு பொங்கலுக்கு வெளியான துணிவு, 350 கோடி ரூபாய் வசூலித்து மாஸ் காட்டியிருந்தது. இதனால் அஜித்தின் ஏகே 62 படத்துக்கும் அதிக எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில் அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. லைகா தயாரிக்கும் இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார்.
அஜித்துடன் த்ரிஷா, ஆக்ஷன் கிங் அர்ஜுன், ஆரவ், ரெஜினா, ப்ரியா பவானி சங்கர் உட்பட பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது. முழுக்க முழுக்க ஆக்ஷன் ஜானரில் உருவாகும் விடாமுயற்சி படத்துக்கு இப்போதே அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இதனால் இந்தப் படத்தின் சாட்டிலைட், ஓடிடி உரிமைகளை கைப்பற்ற பெரும் போட்டி நிலவியது.
இந்த ரேஸில் விடாமுயற்சி படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி வாங்கியுள்ளதாம். இதற்காக 100 கோடி ரூபாய் வரை பிஸினஸ் நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல் விடாமுயற்சி ஓடிடி ரைட்ஸ் நெட்பிளிக்ஸ் வசம் சென்றுள்ளதாம். இந்த ரைட்ஸ் 150 கோடி ரூபாய்க்கு நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் ஒட்டுமொத்தமாக விடாமுயற்சி ப்ரீ ரிலீஸ் பிஸினஸ் 250 கோடி ரூபாய் வரை நடந்துள்ளது.
ஷூட்டிங் முடியும் முன்பே 250 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது விடாமுயற்சி. இதனால் பாக்ஸ் ஆபிஸிலும் அஜித்தின் தரமான சம்பவம் உறுதி என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அல்லது டீசர் ஏதேனும் ஜனவரி 1ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











