VidaaMuyarchi: பொங்கலுக்கும் விடாமுயற்சி அப்டேட் வராது... ரசிகர்களுக்கு விபூதி அடித்த லைகா!
சென்னை: அஜித் தற்போது தனது 62வது படமான விடாமுயற்சியில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்து வருகிறது. விடாமுயற்சி ஃபர்ஸ்ட் லுக் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகும் என அஜித் ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் தற்போது ரசிகர்களுக்கு ஏமாற்றம் கொடுத்துள்ளது படக்குழு.
விடாமுயற்சி ஃபர்ஸ்ட் லுக் அப்டேட்: அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ஆக்ஷன் ஜானரில் உருவாகும் இந்தப் படத்தில் அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பிரம்மாண்டமாக உருவாகும் விடாமுயற்சி அஜித் ரசிகர்களுக்கு தரமான ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தப் படத்தின் அபிஸியல் அப்டேட்ஸ்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

ஏற்கனவே படப்பிடிப்பு தாமதமாக தொடங்கியதால், கடந்தாண்டு அஜித் பிறந்தநாளான மே 1ம் தேதி ஏகே 62 டைட்டில் விடாமுயற்சி என்பது மட்டும் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் படக்குழு தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. வலிமை, துணிவு என அஜித்தின் படங்கள் அனைத்துமே அப்டேட் இல்லாமல் சைலண்டாக உருவாகின்றன. ஆனால், ரசிகர்களோ இண்டர்நேஷனல் அளவில் அஜித் படங்களின் அப்டேட் கேட்டு போர் கொடி தூக்குவது வழக்கம்.
அதிலும் விஜய் படத்தில் இருந்து அப்டேட் வந்துவிட்டால் அஜித் ரசிகர்களால் தாங்கிக்கொள்ளவே முடியாது. புத்தாண்டு ஸ்பெஷலாக விஜய்யின் தளபதி 68 டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியானது. அதன்படி தளபதி 68 தற்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற டைட்டிலில் உருவாகிறது. மேலும், விஜய்யின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர்களும் மாஸ் காட்டின.
இதனால், பொங்கல் ஸ்பெஷலாக விடாமுயற்சியில் இருந்து அஜித்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், தற்போது அதற்கும் வாய்ப்பில்ல ராசா என்ற டோனில் படக்குழு தரப்பில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி விடாமுயற்சி ஃபர்ஸ்ட் லுக் மார்ச் மாதம் தான் வெளியாகும் என சொல்லப்படுகிறது. தற்போது மூன்றாவது ஷெட்யூல் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது.
அதன் பின்னர் தான் அஜித்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை டிசைன் செய்ய மகிழ் திருமேனி முடிவு செய்துள்ளாராம். இதனையறிந்த அஜித் ரசிகர்கள் நொந்து நூடுல்ஸ் ஆகியுள்ளனர். அதேபோல் விடாமுயற்சி ரிலீஸான பின்னர் தான் அஜித்தின் ஏகே 63 படம் குறித்தும் அபிஸியல் அப்டேட் வெளியாகுமாம். இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாக ஏற்கனவே உறுதியாகிவிட்டதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











