VidaaMuyarchi: அஜித்தின் விடாமுயற்சி ஹாலிவுட் படத்தின் காப்பியா..? ஆரம்பமே அமர்க்களமா இருக்கே!

சென்னை: கோலிவுட்டின் மாஸ் ஹீரோக்களில் ஒருவரான அஜித், தற்போது விடாமுயற்சி படத்தில் கமிட்டாகியுள்ளார்.

மகிழ் திருமேனி இயக்கவுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

விடாமுயற்சி ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ஹாலிவுட்டில் இருந்து ஒரு படத்தை அஜித்தே செலக்ட் செய்துள்ளதாகவும், அதனை தழுவியே விடாமுயற்சி உருவாகவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

 VidaaMuyarchi: Ajiths VidaaMuyarchi is based on the Hollywood super hit film Breakdown

ஹாலிவுட் படத்தின் காப்பியா விடாமுயற்சி..?: அஜித்தின் துணிவு திரைப்படம் கடந்த பொங்கல் ஸ்பெஷலாக வெளியானது. ஹெச் வினோத் இயக்கிய இந்தப் படம், அஜித்துக்கு சூப்பரான கம்பேக் கொடுத்ததோடு, பாக்ஸ் ஆபிஸில் 300 கோடிக்கும் மேல் வசூலித்தது. இதனையடுத்து தனது 62வது படத்தில் கமிட்டானார் அஜித். லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இந்தப் படத்தை இயக்கவிருந்தார். ஆனால், தற்போது விக்னேஷ் சிவனுக்குப் பதிலாக மகிழ் திருமேனி இயக்குநரானார்.

இதனால், கடந்த மார்ச் மாதம் தொடங்கியிருக்க வேண்டிய விடாமுயற்சி ஷூட்டிங் இன்னும் தொடங்கவில்லை. விடமுயற்சி டைட்டில் அப்டேட் மட்டுமே இதுவரை வெளியாகியுள்ளது. அதேநேரம் விரைவில் விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கும் என சமீபத்தில் லைகா சுபாஸ்கரன் தெரிவித்திருந்தார். இதனால் உற்சாகமான அஜித் ரசிகர்கள், விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் அப்டேட்டுக்காக காத்திருக்கின்றனர்.

இதனிடையே அஜித்தின் விடாமுயற்சி படத்தின் கதை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. முதற்கட்டமாக விடாமுயற்சி கதை ஹாலிவுட்டில் இருந்து கோலிவுட்டுக்கு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது, கர்ட்ரஸ்ஸல் நடித்து 1997ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படம் பிரேக்டவுன். சூப்பர் ஹிட் அடித்த இந்தப் படத்தின் கதையைத் தழுவித்தான், அஜித்தின் விடாமுயற்சி உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. மகிழ் திருமேனி சொன்ன கதைகளை அஜித் ஓகே பண்ணவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹாலிவுட் படங்களின் பெயரை சொல்லி, அதன் கருவை வைத்து தனக்கேற்றவாறு கதையை உருவாக்கக் கூறுகிறாராம் அஜித். ஹெச் வினோத்திடமும் அஜித் இதே கண்டிஷன் போட்டதாக சொல்லப்படுகிறது. மகிழ் திருமேனியை தொடர்ந்து தனது அடுத்த படத்தை இயக்கவுள்ள சிறுத்தை சிவாவிடமும் தொடர்வதாக தகவல் வெளியாகியுள்ளது. நேரடி படங்களில் நடிப்பதைவிட, ஹாலிவுட்டில் இருந்து கதையை தழுவி, அதில் ஹிட் கொடுப்பதை எளிதாக பார்க்கிறாராம் அஜித்.

இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் கதை குறித்து வெளியான தகவல்கள் குறித்து, அபிஸியல் அப்டேட் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் அஜித் ஹாலிவுட் படங்களை காப்பியடித்து ஹிட் கொடுக்கும் ஹீரோ இல்லை. அவரது மாஸ் ஹீரோயிசத்துக்கு நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாகும் என கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X