VidaaMuyarchi: அஜித் ரசிகர்களுக்கு மீண்டும் பெரிய ஏமாற்றம்... தள்ளிப் போகும் விடாமுயற்சி ரிலீஸ்..?
சென்னை: அஜித்தின் 62வது படமாக உருவாகி வரும் விடாமுயற்சி மே மாதம் ரிலீஸாகும் என சொல்லப்பட்டது. ஆனால் தற்போது ரிலீஸ் தேதியில் மிகப் பெரிய மாற்றம் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் ஏற்கனவே அப்டேட் ஏதும் இல்லாமல் நொந்து போயிருந்த அஜித் ரசிகர்கள் இப்போது விரக்தியில் உள்ளனர்.
விடாமுயற்சி ரிலீஸ் தேதியில் மாற்றம்
துணிவு வெற்றியை தொடர்ந்து விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் அஜித். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடிக்க, அனிருத் இசையமைத்து வருகிறார். விடாமுயற்சி ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வந்தது.

இதுபற்றி படக்குழு அபிஸியலாக அறிவிக்கவில்லை என்றாலும், ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட அஜித்தின் புகைப்படங்கள் வைரலாகி வந்தன. அதேபோல் அர்ஜுன், ஆரவ் உள்ளிட்ட படக்குழுவினருக்கும் அடிக்கடி விருந்து கொடுத்து அசத்தி வந்தார் அஜித். இந்தப் படத்தின் ஷூட்டிங் எதிர்பார்த்ததை விட தாமதமாக தான் தொடங்கியது. ஆனாலும் அதிகம் பிரேக் விடாமல் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தி வந்தார் மகிழ் திருமேனி.
அஜித்தும் பைக் டூர் எதுவும் செல்லாமல் மொத்தமாக கால்ஷீட் கொடுத்து நடித்து வந்தார். இதனால் விடாமுயற்சி ஏப்ரல் கடைசி அல்லது மே 1ம் தேதி அஜித் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகும் என தகவல்கள் தெரிவித்தன. எனவே நியூ இயர், பொங்கல் ஆகிய தினங்களில் விடாமுயற்சி ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இந்நிலையில் லைகா நிறுவனத்தின் பட்ஜெட் பிரச்சினை காரணமாக விடாமுயற்சி படப்பிடிப்புக்கு பிரேக் விடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இனி வெளிநாடுகளில் படப்பிடிப்பு கிடையாது என்றும், சென்னையில் செட் போட்டு ஷூட்டிங் நடத்தப் போவதாகவும் செய்திகள் வெளியாகின. இன்னும் படப்பிடிப்பு முடியாததால் மே மாதம் படம் வெளியாவது கஷ்டம் என்றும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து விடாமுயற்சி படத்தை ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாம். ஷூட்டிங் முடித்துவிட்டு போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள், பேட்ச் ஒர்க், ரீ-ரெக்கார்டிங் என இன்னும் பல வேலைகள் இருப்பதாகவும், முக்கியமாக அஜித்தின் ஆக்ஷன் காட்சிகளுக்கு கிராபிக்ஸ் ஒர்க் இருப்பதாலும் ரிலீஸ் தேதியை ஆகஸ்ட் வரை கொண்டு சென்றுள்ளது படக்குழு. ஆனாலும் இதுகுறித்து உறுதியான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications











