VidaaMuyarchi: கடைசி நேரத்தில் தள்ளிப்போன விடாமுயற்சி பூஜை... அலறவைத்த அஜித் ரசிகர்கள் ரியாக்‌ஷன்ஸ்

சென்னை: அஜித்தின் 62வது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. விடாமுயற்சி என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். மே மாதம் அஜித் பிறந்தநாளில் விடாமுயற்சி படம் குறித்து அபிஸியலாக அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடந்து இன்று விடாமுயற்சி படத்தின் பூஜை போடப்படும் என சொல்லப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் தள்ளிப்போனதாக சொல்லப்படுகிறது.

 VidaaMuyarchi: Ajiths VidaaMuyarchi launch Pooja is not happening today

கடைசி நேரத்தில் தள்ளிப் போன விடாமுயற்சி பூஜை : அஜித்தின் 62வது படமாக 'விடாமுயற்சி' உருவாகவுள்ளது. லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். முன்னதாக இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவிருந்தது குறிப்பிடத்தக்கது. விடாமுயற்சி படம் மூலம் அஜித், மகிழ் திருமேனி, அனிருத், லைகா கூட்டணி முதன்முறையாக இணையவுள்ளது.

அஜித்தின் பிறந்தநாள் தினமான மே 1ம் தேதி விடாமுயற்சி டைட்டில் அறிவிக்கப்பட்டது. இதனால் உடனடியாக படப்பிடிப்பும் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அஜித் தொடர்ச்சியாக பைக் டூர் சென்றுகொண்ட இருப்பதால் இன்னும் ஷூட்டிங் தொடங்கவில்லை. அதேநேரம் விடாமுயற்சி படத்திற்காக அஜித் தனது உடல் எடையை குறைத்து வருவதால் தான் படப்பிடிப்பு தாமதமாகிறது என சொல்லப்பட்டது.

இன்னொருபக்கம் அஜித் ரசிகர்கள் தொடர்ச்சியாக விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் அப்டேட் குறித்து கேட்டு வந்தனர். ஆனாலும், லைகா தரப்பில் இருந்து இதுவரை எந்த அபிஸியல் அப்டேட்டும் வெளியாகவில்லை. இந்நிலையில், ஆகஸ்ட் இறுதியில் விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கிவிடும் என சமீபத்தில் செய்திகள் வெளியாகின. அதேபோல், இன்று விடாமுயற்சி படத்திற்கு பூஜை போடப்படுவதாகவும் சொல்லப்பட்டது.

இந்நிலையில், விடாமுயற்சி பூஜை கடைசி நேரத்தில் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான காரணங்கள் என்னவென்று இதுவரை தெரியவரவில்லை. இதனையறிந்த அஜித் ரசிகர்கள் விரக்தியின் உச்சத்திற்கே சென்றுவிட்டனர். இதனையடுத்து அஜித் ரசிகர்களின் டிவிட்டர் ரியக்‌ஷன்ஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விடாமுயற்சி பூஜை குறித்து பிரபல சினிமா ட்ராக்கர் ரமேஷ் பாலா ட்விட் செய்துள்ளார்.

அதில் கமெண்ட்ஸ் செய்து வரும் அஜித் ரசிகர்கள், "இன்னுமா விடாமுயற்சி அப்டேட் வரும்ன்னு எதிர்பார்த்துட்டு இருக்கீங்க" என கலாய்த்துள்ளனர். மேலும், "இதுதான் ஊருக்கே தெரிந்த விஷயம், விடாமுயற்சி அப்டேட் வராது, ஆனா அஜித் பைக்ல டூர் போய்கொண்டே இருப்பார்" என ட்ரோல் செய்துள்ளனர். இன்னொரு நெட்டிசன் விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கினால் தான் அது ஆச்சர்யம் எனக் கூறியுள்ளார். இதேபோல், இன்னும் பல மீம்ஸ்களுடன் விடாமுயற்சி படத்தின் அப்டேட்டை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X