VidaaMuyarchi: அசுர வேகத்தில் விடாமுயற்சி ஷூட்டிங்... அஜித்துடன் இணையும் மங்காத்தா காம்போ!
சென்னை: அஜித் தற்போது தனது 62வது படமான விடாமுயற்சியில் நடித்து வருகிறார்.
லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார்.

இந்நிலையில், அஜர்பைஜான் நாட்டில் தொடங்கிய விடாமுயற்சி ஷூட்டிங் முடிவுக்கு வந்துவிட்டதாம்.
இதனையடுத்து இன்று தொடங்கும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.
அஜர்பைஜான் டூ துபாய்
அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியானது. இந்தாண்டு பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸான துணிவு, விஜய்யின் வாரிசுடன் மோதி, பாக்ஸ் ஆபிஸில் 350 கோடி ரூபாய் வரை வசூலித்தது. துணிவு கொடுத்த கம்பேக் காரணமாக அஜித்தின் 62வது படம் பற்றி ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதன்படி லைகா தயாரிக்கும் ஏகே 62, விடாமுயற்சி என்ற டைட்டிலில் உருவாகி வருகிறது.
ஏகே 62 இயக்குநராக விக்னேஷ் சிவனுக்குப் பதில் மகிழ் திருமேனி கமிட்டானதால், விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்க கொஞ்சம் தாமதமானது. இந்நிலையில், கடந்த மாதம் அஜர்பைஜான் நாட்டில் விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கியது. இதுபற்றி படக்குழு தரப்பில் இருந்து இதுவரை அபிஸியலாக அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால், படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட போட்டோஸ் வீடியோஸ் வைரலாகின.
அதன்படி, அஜர்பைஜானில் கார் சேசிங் அதிகம் நிறைந்த ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இந்த கார் சேசிங் சீக்வென்ஸ் அஜித் ரசிகர்களுக்கு வெறித்தனமான ட்ரீட்டாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இதனையடுத்து அஜர்பைஜான் ஷெட்யூலை முடித்த படக்குழு, அடுத்து துபாய் பறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று முதல் துபாயில் விடாமுயற்சி படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாம்.
இதில், அஜித்துடன் த்ரிஷா, ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஆகியோரும் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. மங்காத்தா படத்துக்குப் பின்னர் இந்தக் கூட்டணி மீண்டும் விடாமுயற்சியில் இணைவது குறிப்பிடத்தக்கது. விஜய்யின் லியோ படத்தில் ஹெரால்ட் தாஸ் கேரக்டரில் மிரட்டலான வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார் அர்ஜுன். அதேபோல் த்ரிஷாவும் லியோ படத்தில் விஜய்யின் மனைவியாக நடித்திருந்தார்.
அதேநேரம் தீபாவளி ஸ்பெஷலாக விடாமுயற்சி அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்தப் படம் அடுத்தாண்டு சம்மருக்கு வெளியாகலாம் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











