VidaaMuyarchi: அதிரடி முடிவெடுத்த அஜித்... பரபரப்பான விடாமுயற்சி படக்குழு... அப்டேட் வருமா வராதா?

சென்னை: அஜித் நடித்த துணிவு திரைப்படம் கடந்த பொங்கல் ஸ்பெஷலாக வெளியானது.
அஜித்துக்கு தரமான கம்பேக் படமாக அமைந்த துணிவு, பாக்ஸ் ஆபிஸில் 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

இதனைத் தொடர்ந்து அஜித் கமிட்டான ஏகே 62 படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது.
இப்படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ள நிலையில், இதுவரை ஷூட்டிங் குறித்த அப்டேட் எதுவும் வெளியாகவில்லை.

 VidaaMuyarchi: Ajiths VidaaMuyarchi official update will be expected on August 15

அதிரடி முடிவெடுத்த அஜித்: அஜித் நடித்த துணிவு திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியானது. விஜய்யின் வாரிசுக்கு போட்டியாக ரிலீஸான துணிவு, பாக்ஸ் ஆபிஸில் 350 கோடிக்கும் மேல் வசூலித்ததாக சொல்லப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக லைகா தயாரிப்பில் தனது 62வது படத்தில் நடிக்க கமிட்டானார் அஜித். இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவிருந்த நிலையில், தற்போது அவருக்குப் பதிலாக இயக்குநர் மகிழ் திருமேனி கமிட்டாகியுள்ளார்.

முன்னதாக ஏகே 62 திரைப்படத்தின் ஷூட்டிங் மார்ச் மாதம் தொடங்கும் என சொல்லப்பட்டது. ஆனால், மகிழ் திருமேனி திடீரென கமிட்டானதால், திரைக்கதை முடிப்பதில் தாமதமானது. இருப்பினும் மே 1ம் தேதி அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு ஏகே 62 டைட்டில் 'விடாமுயற்சி' என அறிவித்த படக்குழு, அதன்பின்னர் எந்த அப்டேட்டையும் வெளியிடவில்லை. ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்பட்டது.

ஆனாலும், இயக்குநர் மகிழ் திருமேனி இன்னும் படப்பிடிப்பை தொடங்கவில்லை. அதுமட்டும் இல்லாமல் அஜித்தும் தொடர்ந்து வெளிநாடுகளுக்கு பைக் டூர் செல்வதிலேயே பிஸியாக இருந்தார். இதனால் விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்குமா அல்லது படமே ட்ராப் ஆகிறதா என ரசிகர்களிடம் குழப்பம் ஏற்பட்டது. அதேநேரம் விடாமுயற்சி படத்திற்காக அஜித் உடல் எடையை குறைத்து வருவதாகவும் சொல்லப்பட்டது.

சமூக வலைத்தளங்களில் பலவிதமான தகவல்கள் வெளியாகினாலும், விடாமுயற்சி படக்குழு தரப்பில் இருந்து அபிஸியலாக எந்த அப்டேட்டும் வரவில்லை. ஆனால், லைகா தயாரிப்பில் உருவாகும் மற்ற படங்களின் படப்பிடிப்புகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டே இருக்கின்றன. இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் குறித்து தற்போது அப்டேட் கிடைத்துள்ளது.

அதன்படி, ஆகஸ்ட் இறுதியில் விடாமுயற்சி படப்பிடிப்பை தொடங்கிவிடலாம் என லைகா முடிவு செய்துள்ளதாம். இல்லையென்றால் அஜித் தொடர்ந்து பைக் டூர் செல்வதில் தீவிரமாகிவிடுவார் என முடிவெடுத்த லைகா, இயக்குநர் மகிழ் திருமேனியிடம் படப்பிடிப்பைத் தொடங்க சிக்னல் கொடுத்துவிட்டதாம். இதுகுறித்து அஜித்திடம் பேசியதை அடுத்து அவரும் விரைவில் சென்னை திரும்பவுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், இதுகுறித்த அபிஸியல் அப்டேட் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X