VidaaMuyarchi: இணையத்தில் ட்ரெண்டாகும் விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ... ஆக்‌ஷன் ட்ரீட் லோடிங்

அஜர்பைஜான்: அஜித்தின் 62வது படமாக மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி உருவாகி வருகிறது.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது.

இதில் அஜித், த்ரிஷா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது.

 VidaaMuyarchi: Ajiths VidaaMuyarchi shooting spot video and photos are trending

லீக்கான விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ: அஜித்தின் துணிவு திரைப்படம் இந்தாண்டு பொங்கல் ஸ்பெஷலாக வெளியானது. அஜித் - வினோத் கூட்டணியில் உருவான துணிவு, விஜய்யின் வாரிசு படத்துடன் நேருக்கு நேர் மோதியது. பாக்ஸ் ஆபிஸில் தரமான ஓபனிங் கிடைத்த துணிவு படத்தால், அஜித்தின் ஏகே 62 மீதும் அதிக எதிர்பார்ப்பு எழுந்தது. முதலில் விக்னேஷ் சிவன் இயக்கவிருந்த இந்தப் படத்தை தற்போது மகிழ் திருமேனி இயக்கி வருகிறார்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் ஏகே 62 படத்திற்கு விடாமுயற்சி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அஜித் பிறந்தநாளான மே 1ம் தேதி ஏகே 62 படத்தின் டைட்டில் விடாமுயற்சி என அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் இந்தப் படம் குறித்த அப்டேட் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கியதாக செய்திகள் வெளியாகின.

 VidaaMuyarchi: Ajiths VidaaMuyarchi shooting spot video and photos are trending

அஜர்பைஜான் நாட்டில் தொடங்கிய விடாமுயற்சி ஷூட்டிங்கில் அஜித் கலந்துகொண்டதாகவும் சொல்லப்பட்டது. அஜித்துடன் த்ரிஷா, ப்ரியா பவானி சங்கர் ஆகியோரும் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இதனிடையே ஆர்ட் டைரக்டர் மிலன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததும் விடாமுயற்சி படக்குழுவை சோகத்தில் ஆழ்த்தியது. ஆனால், படப்பிடிப்பை விடாமல் வேகமாக நடத்தி வருகிறார் மகிழ் திருமேனி.

இந்தப் படத்தில் அஜித் செம்ம மாஸ்ஸான லுக்கில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆக்‌ஷன் ஜானரில் உருவாகும் விடாமுயற்சி அஜித் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அஜர்பைஜானில் நடைபெற்று வரும் விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ, போட்டோஸ் இணையத்தில் லீக்காகியுள்ளன.

 VidaaMuyarchi: Ajiths VidaaMuyarchi shooting spot video and photos are trending

இந்த வீடியோவை பார்க்கும் போது, அதிரடியான கார் சேசிங் பைட் சீன் ஷூட் செய்து வருவது கன்ஃபார்ம் ஆகியுள்ளது. அதேபோல், இயக்குநர் மகிழ் திருமேனியும் ஷூட்டிங் ஸ்பாட்டில் நின்றுகொண்டிருக்கிறார். இதனால் விடாமுயற்சி படத்தில் அஜித் ரசிகர்களுக்கு தரமான ஆக்‌ஷன் சம்பவம் காத்திருக்கிறது. தற்போது லீக்கான ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X