VidaaMuyarchi: மகிழ்திருமேனி பிறந்தநாள் ஸ்பெஷல்... விடாமுயற்சி அப்டேட்... அஜித் ரசிகர்கள் வெயிட்டிங்
சென்னை: அஜித்தின் விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளார்.
முன்தினம் பார்த்தேனே திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மகிழ் திருமேனி.
இதுவரை 5 படங்கள் இயக்கியுள்ள மகிழ் திருமேனி, இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இதனையடுத்து மகிழ் திருமேனி பிறந்தநாள் ஸ்பெஷலாக அஜித்தின் விடாமுயற்சி அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகிழ் திருமேனி பிறந்தநாளில் விடாமுயற்சி அப்டேட்: கோலிவுட்டின் தனித்துவமான இயக்குநர்களில் மகிழ் திருமேனியும் ஒருவர். கெளதம் மேனன், செல்வராகவன் ஆகியோரிடம் உதவியாளராக இருந்த மகிழ் திருமேனி, 2010ல் வெளியான முன்தினம் பார்த்தேனே திரைப்படம் மூலம் இயக்குநரானார். அதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய தடையற தாக்க சூப்பர் ஹிட் அடித்தது.
ஆக்ஷன் ஜானர் படங்களின் ஸ்பெஷலிஸ்ட்டான மகிழ் திருமேனி, தொடர்ந்து மீகாமன், தடம், கலகத் தலைவன் ஆகிய திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். இந்த வரிசையில் தற்போது அஜித்தின் விடாமுயற்சி படத்தை இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. லைகா தயாரிப்பில் அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் விக்னேஷ் சிவன் சொதப்பியதால், அந்த வாய்ப்பு மகிழ் திருமேனிக்கு கிடைத்தது.
இதனையடுத்து அஜித்தின் ஏகே 62 படத்தின் டைட்டில் விடாமுயற்சி என அறிவித்தார். அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி விடாமுயற்சி டைட்டிலின் அபிஸியல் அப்டேட் வெளியானது. ஆனால், அதன்பின்னர் இந்தப் படம் குறித்து எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இதனால், விடாமுயற்சி அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் லைகா நிறுவனத்தின் கேட்டை ஆட்டி வந்தனர். அதன்படி இன்று விடாமுயற்சி அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் மகிழ் திருமேனி இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து அவருக்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் பிறந்தநாள் வாழ்த்துக் கூறி வருகின்றனர். இதனால், லைகா புரொடக்ஷன் நிறுவனமும் மகிழ் திருமேனிக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால், இந்த வாழ்த்து ரொம்பவே ஸ்பெஷலாக இருக்கும் எனவும், இது அஜித் ரசிகர்களுக்கும் ட்ரீட்டாக இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங், அஜர்பைஜான் நாட்டில் தொடங்கியதாகத் தெரிகிறது. கடந்த வாரம் 4ம் தேதி முதல் தொடங்கிய இந்தப் படப்பிடிப்பில் அஜித் கலந்துகொண்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இதுபற்றி படக்குழு சார்பில் எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இதனால், மகிழ் திருமேனியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக, விடாமுயற்சி ஷூட்டிங் அப்டேட் வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும், அஜித் ரசிகர்களுக்காக இன்னொரு தரமான சம்பவத்தையும் தயாரிப்பு நிறுவனம் கொடுக்கவிருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறியுள்ளன.


Click it and Unblock the Notifications











