VidaaMuyarchi: அஜித்தின் விடாமுயற்சியை தூசு தட்டிய லைகா... ரசிகர்களை குழப்பும் பழைய அப்டேட்!

சென்னை: அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழாவில் இதுகுறித்து லைகா சுபாஸ்கரன் அப்டேட் கொடுத்திருந்தார்.

ஆனாலும் இதுவரை எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில், லைகா நிறுவனம் விடாமுயற்சியை தூசி தட்டி வருவதாக சொல்லப்படுகிறது.

விடாமுயற்சி ஷூட்டிங் குறித்து லைகா கொடுத்துள்ள அப்டேட் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

 VidaaMuyarchi: Ajiths VidaaMuyarchi update is expected to be revealed soon

விடாமுயற்சியை தூசு தட்டிய லைகா: அஜித் தற்போது தனது 62வது படமான விடாமுயற்சியில் கமிட்டாகியுள்ளார். லைகா தயாரிக்கும் இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். விக்னேஷ் சிவனுக்குப் பதிலாக மகிழ் திருமேனி கமிட்டானதால் ஏகே 62 படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதமானது. இதனால், அஜித்தும் சில மாதங்களாக பைக் டூர் சென்றிருந்தார். இன்னொரு பக்கம் விடாமுயற்சி படம் ட்ராப் ஆனதாக தகவல்கள் பரவின.

இதனையடுத்து இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, விடாமுயற்சி ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என லைகா சுபாஸ்கரன் தெரிவித்தார். சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட லைகா சுபாஸ்கரன் இதுபற்றி மேடையிலேயே அறிவித்தார். மேலும், இந்தப் படம் தங்களுக்கு ரொம்பவே ஸ்பெஷல் என்றும் அவர் கூறியிருந்தார். இதனால் விடாமுயற்சி ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனாலும், கடந்த ஒருவாரமாக விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் குறித்து அபிஸியலாக அப்டேட் எதுவும் வெளியாகவில்லை. அதற்குப் பதிலாக ஏற்கனவே கொடுத்த அப்டேட்டை மீண்டும் டிவிட்டரில் பின் செய்துள்ளது. அதாவது அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதியன்று, ஏகே 62 டைட்டில் விடாமுயற்சி என லைகா நிறுவனம் அறிவித்தது. இந்த டிவிட்டர் பதிவு சில மாதங்களாக லைகா டிவிட்டர் பக்கத்தின் டாப்பில் இருந்தது.

 VidaaMuyarchi: Ajiths VidaaMuyarchi update is expected to be revealed soon

ஆனால், அடுத்தடுத்து லைகாவின் மற்ற படங்களின் அப்டேட் வெளியானதால் விடாமுயற்சி டைட்டில் போஸ்ட் டாப்பில் இல்லாமல் இருந்தது. இந்நிலையில், விடாமுயற்சி டைட்டில் போஸ்ட்டை மீண்டும் பின் செய்துவைத்து அஜித் ரசிகர்களுக்கு லீட் கொடுத்துள்ளது லைகா. இதனால், எப்போது வேண்டுமானாலும் விடாமுயற்சி படத்தின் அபிஸியல் அப்டேட் வெளியாகலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் பெரும்பாலும் துபாய், தாய்லாந்து, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் மட்டுமே நடக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. சென்னையில் மொத்தமே 10 நாட்கள் மட்டும் ஷெட்யூல் செய்துள்ளாராம் மகிழ் திருமேனி. சமீபத்தில் அஜித் துபாய் சென்றுவிட்டு சென்னை திரும்பியதும் இதற்காக தான் எனக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X