அஜித் பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் ட்ரீட்?.. அப்டேட்ஸ் வருதாம்

சென்னை: அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். லைகா நிறுவனம் படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். மகிழ் திருமேனி படத்தை இயக்குகிறார். முதன்முறையாக அஜித்துடன் மகிழ் திருமேனி இணைந்திருப்பதால் கண்டிப்பாக இந்தப் படம் ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கை ஏகே ரசிகர்களிடம் இருக்கிறது. இப்போது அஜித் பைக் டூரில் இருக்கிறார். அவருடன் ஆரவ் உள்ளிட்டோரும் சென்றிருந்தனர். சூழல் இப்படி இருக்க அஜித்தின் பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் காத்திருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவின் டாப் 3 ஹீரோக்களில் ஒருவரான அஜித்குமார் கடைசியாக துணிவு படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் சூப்பர் ஹிட்டடித்தது. எப்போதும் ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டு அடுத்த படத்தில் கமிட்டாகும் அஜித்குமார் தன்னுடைய 62ஆவது படத்தில் துணிவு படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே கமிட்டானார். அதனை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் படத்தின் இரண்டாம் பாதி தயாரிப்பு தரப்புக்கு திருப்தி இல்லாததால் அதிலிருந்து வெளியேறினார்.

Vidaamuyarchi And Good Bad Ugly Movie Updates Release on Ajith Birthday

விடாமுயற்சி: விக்னேஷ் சிவன் வெளியேறிய பிறகு அஜித் 62அவது படத்தை இயக்குவதற்கு மகிழ் திருமேனி கமிட்டானார். படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. பெயர் அறிவிக்கப்பட்டதோடு சரி; அதற்கு பிறகு வேறு எந்த அப்டேட்டும் இதுவரை படத்திலிருந்து வெளியாகவில்லை. ஆகினும் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்தது.

நட்சத்திர பட்டாளம்: இந்தப் படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளராக ஓம் பிரகாஷ் பணியாற்றுகிறார். முன்னதாக நீரவ் ஷா பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. ஆக்‌ஷன் ஜானரில் மகிழ் திருமேனி ஸ்டைலில் இந்தப் படம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாதாரண ஒன் லைன்தான் என கூறப்பட்டாலும் அதனை மகிழ் பக்கா திரைக்கதையோடு ப்ரெசண்ட் செய்வார் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

அடுத்த லொக்கேஷன்: அஜித்தும் மும்முரமாக நடித்துவந்த சூழலில் அஜர்பைஜான் ஷெட்யூல் முடிந்ததாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதுகுறித்து அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா புகைப்படங்களை பதிவிட்டு தெரிவித்ததோடு புதிய லொக்கேஷன் தேடும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அநேகமாக அடுத்தக்கட்ட ஷூட்டிங் சென்னையில் செட் போட்டு நடக்கும் இல்லையென்றால் வேறு மாநிலத்தில் நடக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் அஜர்பைஜானுக்கே படக்குழு செல்ல திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

குட் பேட் அக்லி: இந்தப் படத்தை முடித்துவிட்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் அஜித்குமார். படம் 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாகவிருக்கிறது. அஜித்துடன் வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் அடுத்தடுத்து வெளியாகவிருக்கின்றன.

அஜித் பிறந்தநாள்: இந்நிலையில் அஜித்தின் பிறந்தநாள் மே ஒன்றாம் தேதி வருகிறது. அதனையொட்டி அன்றைய தினத்தில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்களின் அப்டேட்டுகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அநேகமாக குட் பேட் அக்லியின் காஸ்ட் அண்ட் க்ரூ பற்றிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X