VidaaMuyarchi: சைலண்டாக வேலையை முடித்த அனிருத்... ஃபர்ஸ்ட் சிங்கிளுடன் விடாமுயற்சி அப்டேட்!

சென்னை: அஜித் நடித்து வரும் விடாமுயற்சி ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றிய தரமான அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

விடாமுயற்சி ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்
அஜித் நடித்த துணிவு திரைப்படம் இந்தாண்டு பொங்கலுக்கு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. ஹெச் வினோத் இயக்கிய இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார். துணிவை தொடர்ந்து அஜித் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. ஏகே 62 என்ற டைட்டிலில் தொடங்கப்பட்ட விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

 VidaaMuyarchi: Anirudh Complete For Ajiths VidaaMuyarchi Movie Songs

வேதாளம், விவேகம் படங்களுக்குப் பின்னர் அஜித்துடன் இணைந்துள்ளார் அனிருத். சூப்பர் ஸ்டார் ரஜினி படங்களுக்கு கம்போஸ் செய்யும் போது, மறைமுகமாக விஜய்க்கு பஞ்ச் வைத்து சாங்ஸ் கம்போஸ் செய்வார். அதேபோல் விஜய் படங்களில் கமிட்டானால், ரஜினிக்கு ஆப்பு வைக்கும் விதமாக பாடல்கள் கொடுப்பது அனிருத்தின் வழக்கம். அதேநேரம் அஜித் என வந்துவிட்டால், ரஜினி, விஜய் இருவருக்கும் சேர்ந்து பஞ்ச் வைத்துவிடுவது அனிருத்தின் கிரேட் எஸ்கேப்.

ஏனென்றால் ரஜினி, விஜய் ரசிகர்களை விட அஜித் ஃபேன்ஸ் ரொம்பவே உக்கிரமானவர்கள் என்பது அனிருத்துக்கு தெரியும். அதனால் விடாமுயற்சி படத்துக்கு பார்த்து பார்த்து சாங்ஸ் கம்போஸ் செய்துள்ளாரம் அனிருத். இந்தப் படத்தில் மொத்தம் 4 அல்லது 5 பாடல்கள் வரை இடம்பெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அனைத்து பாடல்களையும் அனிருத் முடித்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

தளபதி 68 படத்தில் விஜய்க்காக தர லோக்கலில் ஒரு பாடல் கம்போஸ் செய்துள்ளாராம் யுவன். அதனை ஓவர்டேக் செய்யும் விதமாக விடாமுயற்சி படத்தில் ஒரு தரமான சம்பவத்தை தரப் போகிறாராம் அனிருத். இதுதான் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளாக இருக்கும் என்றும், இந்தப் பாடல் விரைவில் வெளியாகும் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் அஜித் ரசிகர்கள் செம்ம வைப் மோடில் காத்திருக்கின்றனர்.

அதேபோல் விடாமுயற்சி படத்தின் அனைத்து பாடல்களும் அஜர்பைஜானில் தான் ஷூட்டிங் நடந்துள்ளதாம். விடாமுயற்சி படத்தில் அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது அஜர்பைஜானில் இருந்து துபாய் பறந்த அஜித், அங்கு ஜென்ரலாக ஒரு மெடிக்கல் செக்கப் செய்து வருகிறாராம். விடாமுயற்சி திரைப்படம் மே 1ம் தேதி அஜித் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகும் என சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X