VidaaMuyarchi: அஜித்துடன் இணைந்த இரண்டு பிரபலங்கள்... சூடு பிடிக்கும் விடாமுயற்சி ஷூட்டிங்!
அஜர்பைஜான்: அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் மீண்டும் அஜர்பைஜான் நாட்டில் தொடங்கியது. மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் அஜித்துடன் மேலும் இரண்டு பிரபலங்கள் இணைந்துள்ளனர்.

அஜித்துடன் இணைந்த பிரபலங்கள்
துணிவு வெற்றியைத் தொடர்ந்து ஏகே 62 படத்தில் கமிட்டானார் அஜித். விக்னேஷ் சிவன் இயக்கவிருந்த இந்தப் படத்தை லைகா தயாரிக்கவிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் விக்னேஷ் சிவனுக்குப் பதிலாக மகிழ் திருமேனி ஏகே 62 பட இயக்குநரானார். அதன்பின்னர் ஏகே 62 டைட்டில் விடாமுயற்சி என படக்குழு அறிவித்தது.
இந்நிலையில், கடந்த மாதம் தான் விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்கியது. எந்தவித அறிவிப்பும் இல்லாமல் அஜர்பைஜான் நாட்டில் படப்பிடிப்பை தொடங்கினார் மகிழ் திருமேனி. படத்தின் பெரும்பாலான காட்சிகளை அஜர்பைஜானில் முடித்துவிட திட்டமிட்டுள்ளாராம். அதன்படி ஃபர்ஸ்ட் ஷெட்யூல் ஷூட்டிங்கில், அஜித்துடன் த்ரிஷா, ப்ரியா பவானி சங்கர் இணைந்தனர்.
அதன்பின்னர் இரு வாரங்கள் வரை விடாமுயற்சி படப்பிடிப்புக்கு பிரேக் விடப்பட்டது. அதன்பின்னர் மீண்டும் இந்த வாரம் முதல் விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கியது. இதற்காக அஜித்தும் த்ரிஷாவும் ஒரே விமானத்தில் அஜர்பைஜான் சென்ற வீடியோ வைரலானது. இந்நிலையில் அவர்களைத் தொடந்து தற்போது ஆக்ஷன் கிங் அர்ஜுன், நடிகை ரெஜினா ஆகியோரும் அஜர்பைஜான் சென்றுள்ளனர்.
70 நாட்கள் வரை ஒரே ஷெட்யூலில் நடக்கும் இந்தப் படப்பிடிப்பில், அஜித், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா ஆகியோர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாம். முக்கியமாக அஜித், அர்ஜுன் பங்கேற்கும் தரமான ஆக்ஷன் சீன்ஸ் ஷூட் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், த்ரிஷாவும் சில ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கவுள்ளாராம். ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் ஆக்ஷன் கோரியோகிராபி செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.
அஜித், த்ரிஷா, அர்ஜுன் மூவரும் ஏற்கனவே மங்காத்தா படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இந்த காம்போ மீண்டும் விடாமுயற்சி படத்தில் இணைந்துள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்க்க வைத்துள்ளது. இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புத்தாண்டு அல்லது பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், இந்தப் படம் அஜித் பிறந்தாளை முன்னிட்டு அடுத்தாண்டு மே 1ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











