அஜித்துடன் இணையும் விஜய் பட பிரபலம்... விடாமுயற்சி ஷூட்டிங் எப்போன்னு மட்டும் கேக்காதீங்க!

சென்னை: அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளார்.

லைகா தயாரிக்கவுள்ள விடாமுயற்சி அஜித்தின் 62வது படமாக உருவாகவுள்ளது.

இந்தப் படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்கப்படாமல் இருப்பதால் அஜித் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

இந்நிலையில் விடாமுயற்சி படத்தில் அஜித்துடன் நடிக்க அர்ஜுன் தாஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாம்.

 VidaaMuyarchi: Arjun Das to team up with Ajith in VidaaMuyarchi film

அஜித்துடன் விஜய் பட பிரபலம்: துணிவு வெளியானதைத் தொடர்ந்து தனது 62வது படத்தில் நடிக்கவிருந்தார் அஜித். லைகா தயாரிக்கும் இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால், தற்போது அவருக்குப் பதிலாக மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். இதுகுறித்த அப்டேட் அஜித் பிறந்தநாள் தினத்தில் விடாமுயற்சி டைட்டிலுடன் வெளியானது.

லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஆனாலும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இதுவரை தொடங்கவில்லை. இதனால் ஏமாற்றத்தில் இருந்த அஜித் ரசிகர்களுக்கு சில புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி, இந்தப் படத்தில் நடிக்க அர்ஜுன் தாஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களில் நடித்து பிரபலமானவர் அர்ஜுன் தாஸ். வித்தியாசமான லுக், பேஸ் வாய்ஸ் என Rugged Boy-ஆக ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அர்ஜுன் தாஸ். அதனால், விடாமுயற்சி படத்தில் அவருக்கு ஒரு முக்கியமான கேரக்டர் இருக்கும் என படக்குழு சார்பில் சொல்லப்படுகிறது.

 VidaaMuyarchi: Arjun Das to team up with Ajith in VidaaMuyarchi film

விடாமுயற்சி படத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தற்போது அஜித்தும் மகிழ் திருமேனியும் லண்டனில் இருந்து படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகளை பார்த்து வருகிறார்களாம். மேலும், அங்கேயே முதற்கட்ட படப்பிடிப்பை நடத்த முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முதலில் புனேவில் தொடங்கும் என செய்திகள் வெளியாகின. ஆனால், தற்போது லண்டன் என தெரியவந்துள்ளது. அதேபோல், ஜூன் முதல் வாரத்தில் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்பட்ட நிலையில், தற்போது அதிலும் மாற்றம் நடந்துள்ளதாம். அதன்படி, இம்மாதம் இறுதியில் தான் விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கும் எனத் தெரிகிறது. ஒவ்வொரு முறையும் ஷூட்டிங் தேதியை மட்டும் மாற்றிக்கொண்டே போவது, ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X