VidaaMuyarchi: "ஹாலிவுட் தரத்தில் விடாமுயற்சி... லியோவுக்கும் இதேதான் சொன்னாங்க..” ப்ளூ சட்டை நச்!
சென்னை: அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது.
இந்தப் படம் ஹாலிவுட் தரத்தில் உருவாகி வருவதாக படக்குழு தெரிவித்ததை, ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளார்.

விடாமுயற்சி ஹாலிவுட் தரத்தில் இருக்கும்: விஸ்வாசம் படத்திற்குப் பின்னர் அஜித்துக்கு மிகப் பெரிய கம்பேக் கொடுத்தது துணிவு. இந்தாண்டு பொங்கல் ஸ்பெஷலாக வெளியான துணிவு, மிகப் பெரிய வெற்றிப் பெற்றதோடு, 350 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இதனால் அஜித்தின் ஏகே 62 படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதன்படி லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிறது ஏகே 62.
விடாமுயற்சி என்ற டைட்டிலில் மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் சில தினங்களுக்கு முன்னர் தொடங்கியது. ஆனால், எதிர்பாராதவிதமாக விடாமுயற்சி படத்தின் ஆர்ட் டைரக்டர் மிலன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனால் சோகத்தில் இருந்த விடாமுயற்சி படக்குழு, தற்போது மீண்டும் படப்பிடிப்பை தொடங்கியுள்ளது. மேலும் மிலன் உயிரிழந்ததால், தற்போது அவரது மனைவியை ஆர்ட் டைரக்டராக பணியாற்றவுள்ளாராம்.
அஜர்பைஜான் நாட்டில் உருவாகும் விடாமுயற்சி, முழுக்க முழுக்க ஆக்ஷன் ஜானரில் இருக்கும் என சொல்லப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்தப் படம் ஹாலிவுட் தரத்தில் இருக்கும் என்றும், அதனால் விடாமுயற்சி ஷூட்டிங் முழுவதும் அஜர்பைஜான் நாட்டில் நடைபெறும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது. இதனை பார்த்த ப்ளூ சட்டை மாறன், தனது ஸ்டைலில் பங்கமாக கலாய்த்துள்ளார்.

இதுபற்றி ப்ளூ சட்டை மாறன் தனது டிவிட்டரில் இரண்டு பதிவுகளை போஸ்ட் செய்துள்ளார். அதில் ஒன்றில், விடாமுயற்சி ஹாலிவுட் தரத்தில் இருக்கும் என்பதை குறிப்பிட்டுள்ள ப்ளூ சட்டை மாறன், "லியோவுக்கும் இதைத்தான் சொன்னாங்க" என ட்வீட் செய்துள்ளார். அதேபோல், இன்னொரு பதிவில், "விடாமுயற்சி ஹாலிவுட் தரத்தில் இருக்கும். விவேகம் வந்தப்பவும் இதை சொல்லித்தான எங்க எல்லாரையும் ஏமாத்தனீங்க? என குறிப்பிட்டுள்ளார்.
ப்ளூ சட்டை மாறனின் இந்த டிவிட்டர் பதிவுகள் அஜித் ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது. அதேநேரம் விஜய்யின் லியோவுக்கு இப்படி பில்டப் கொடுத்து ஏமாற்றிவிட்டதாக நெட்டிசன்களும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











