பெயரை மாற்றியதற்கு காரணம் இதுதான்.. விடாமுயற்சி இயக்குநர் சொன்ன டாப் சீக்ரெட்

சென்னை: அஜித்தை வைத்து விடாமுயற்சி திரைப்படத்தை இயக்கியவர் மகிழ் திருமேனி. அந்தப் படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் மகிழின் மேக்கிங்கிற்கும், அஜித்தின் நடிப்புக்கும் ஒருதரப்பினர் தங்களது வரவேற்பையே கொடுத்திருக்கின்றனர். மேலும் இவர்கள் இரண்டு பேரும் இணைந்து மேற்கொண்டு சில படங்களில் பணியாற்ற வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில் மகிழ் திருமேனி கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.

செல்வராகவன், கௌதம் மேனன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்தவர் மகிழ் திருமேனி. காதல் கொண்டேன், வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட படங்களில் அவர் அசிஸ்டெண்ட் டைரக்டராக பணியாற்றியிருக்கிறார். அதன் பிறகு 2010ஆம் ஆண்டு முன்தினம் பார்த்தேனே என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். மாணிக்கம் நாராயணன் தயாரித்திருந்த அந்தப் படத்தில் சஞ்சய் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். படம் சரியாக போகவில்லை. இருப்பினும் மகிழுக்கு நல்ல பெயர் கிடைத்தது.

Ajith Vidaamuyarchi Magizh Thirumeni

கவனம் ஈர்த்த இயக்குநர்: முன்தினம் பார்த்தேனே படத்துக்கு பிறகு 2012ஆம் ஆண்டு அருண் விஜய்யை வைத்து தடையறத் தாக்க படத்தை இயக்கினார். ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவான அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அப்படத்தை பார்த்த பலரும் தமிழுக்கு தரமான இயக்குநர் கிடைத்துவிட்டார் என்று மகிழ் திருமேனியை பாராட்டினார்கள். அதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய மீகாமன், தடம் ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட்டடித்து அவர் மீது பலரது கவனமும் திரும்பியது.

அஜித்துடன் கூட்டணி: இப்படிப்பட்ட சூழலில்தான் அஜித்துடன் மகிழ் திருமேனி இணைகிறார் என்கிற அறிவிப்பு வந்தது. தமிழின் முக்கியமான இளம் இயக்குநர்களில் ஒருவருடன் அஜித் முதன்முறையாக இணைகிறார் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்தது. ஆனால் இந்தப் படத்தை மகிழின் சொந்தக் கதையாக இல்லாமல் பிரேக் டவுன் படத்தின் ரீமேக்காக செய்ய சொல்லி அஜித் ஐடியா கொடுக்க; விடாமுயற்சி திரைப்படம் உருவானது. இதில் திரிஷா, அர்ஜுன் உள்ளிட்டோரும் நடித்திருந்தார்கள்.

விடாமுயற்சி ரெஸ்பான்ஸ்: படமானது கடந்த ஆறாம் தேதி வெளியானது. படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. இருப்பினும் இப்படி ஒரு கதையில் ஸ்டார்டம் வேல்யூ உள்ள பெரிய ஹீரோ நடித்ததற்காக அஜித்தை பாராட்டினார்கள் ஒருதரப்பினர். மகிழ் திருமேனியின் மேக்கிங்கிற்கும் ஓரளவு நல்ல ரெஸ்பான்ஸே கிடைத்தது. இதற்கிடையே படத்தின் ப்ரோமோஷனில் பேசிய இயக்குநர்; மகிழ் திருமேனி எனது உண்மையான பெயர் இல்லை என்று சொல்லி சஸ்பென்ஸ் வைத்தார்.

மோர்கன் ஆண்டனி பேட்டி: இந்நிலையில் தனது உண்மையான பெயர் குறித்தும்; எதற்காக பெயர் மாற்றம் நடந்தது என்பது குறித்தும் சமீபத்தில் பேசிய மகிழ் திருமேனி, "மோர்கன் ஆண்டனிதான் எனது உண்மையான பெயர். அதை தமிழில் மோர்கன் என்று எழுத வேண்டும் அல்லது மார்க் என்று எழுத வேண்டும். அதனை தமிழில் சரியாக எழுத முடியாது. பெயர் மாற்றத்துக்கு அது முதல் காரணம். அதுமட்டுமின்றி எனது பெயர் தமிழில் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதனால்தான் மகிழ் திருமேனி என்று எனக்கு நானே பெயர் வைத்துக்கொண்டேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X