Ajithkumar:சூட்டிங்கே முடியல! அஜர்பைஜானில் இருந்து அர்ஜெண்டாக இந்தியா வரும் அஜித்! என்னவா இருக்கும்?

சென்னை: நடிகர் அஜித் நடிப்பில் தற்போது உருவாகிவரும் திரைப்படங்கள் என்றால் அது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்கள்தான். ஒருக்கட்டத்திற்கு மேல் ஒரே நேரத்தில் பல படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்ட அஜித்குமார், தொடர்ந்து பல ஆண்டுகள் ஒரு படத்தில் நடித்துமுடித்த பின்னர் அடுத்த படத்தில் கமிட் ஆகி வந்தார். இந்நிலையில் தற்போது விடாமுயற்சி படத்தில் முதலில் கமிட் ஆகி அந்த படத்தில் நடித்துக் கொண்டு இருக்கும்போதே அடுத்தபடமான குட் பேட் அக்லி படத்தில் கமிட் ஆனது மட்டும் இல்லாமல் அதில் முதற்கட்ட படப்பிடிப்பில் நடித்தும் முடித்துவிட்டார்.

அஜித் குமார் விடாமுயற்சி படப்பிடிப்பு முடிவதற்கு முன்னரே குட் பேட் அக்லி படத்தில் கமிட் ஆக பல காரணங்கள் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது. குறிப்பாக படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனிக்கும் அஜித்துக்கும் இடையே பல விஷயங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. மற்றொன்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் அஜித்துக்கு பேசியபடி சம்பளத்தை உரிய நேரத்தில் கொடுக்கவில்லை என கூறப்படுகின்றது.

Vidaamuyarchi AjithKumar Good Bad Ugly

இந்நிலையில் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் கடந்த 20ஆம் தேதியில் இருந்து நடைபெற்று வருகின்றது. படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து அஜித் புறப்பட்டுச் சென்ற புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வெளியானது. சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்ற அஜித் முதலில் துபாய்க்குச் சென்றுவிட்டு, அங்கு உள்ள உலகப் புகழ் பெற்ற கார் ரேஸ் மைதானத்தில் ரேஸ் காரை ஓட்டிப்பார்த்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களையும் வீடியோக்களையும் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா வெளியிட்டார்.

Vidaamuyarchi AjithKumar Good Bad Ugly

அதன் பின்னர் அஜர்பைஜானுக்குச் சென்ற அஜித்குமார், அங்கு நடைபெற்ற விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். ஏற்கனவே அஜர்பைஜானில்தான் மொத்த படமும் படமாக்க திட்டமிடப்பட்டு படம் எடுக்கப்பட்டு வருகின்றது. அஜர்பைஜானில் படத்தை எடுக்கலாம் எனக் கூறியதே நடிகர் அஜித் குமார் தான் எனவும் தகவல்கள் வெளியானது. எனவே தயாரிப்பு நிறுவனமும் எந்தவிதமான மறுப்பும் தெரிவிக்காமல் ஓ.கே சொல்லியதால் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வருகின்றது.

Vidaamuyarchi AjithKumar Good Bad Ugly

அஜித்துக்கும் மகிழ்திருமேனிக்கு, அஜித்துக்கும் லைகாவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னைகளால்தான் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் கடந்த 20ஆம் தேதியில் இருந்து படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் அஜித்குமார் தற்போது அஜர்பைஜானில் இருந்து இந்தியாவுக்கு வரவுள்ளார் என கூறப்படுகின்றது. தனது சொந்த காரணங்களுக்காக வரும் ஜூலை 1ஆம் தேதி அஜித் சென்னைக்கு வரவுள்ளார் என கூறப்படுகின்றது. இது குறித்த தகவல் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

Vidaamuyarchi AjithKumar Good Bad Ugly

அஜர்பைஜானில் இருந்து அஜித் சென்னை வந்த பின்னர், மீண்டும் அஜர்பைஜானுக்கே செல்வாரா அல்லது, ஜப்பானுக்குச் சென்று குட் பேட் அக்லி படத்தில் நடிப்பாரா எனவும் பேசப்பட்டு வருகின்றது. விடாமுயற்சி படம் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இதுமட்டும் இல்லாமல், குட் பேட் அக்லியின் செகண்ட் லுக் போஸ்டரை நேற்று அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா வெளியிட்டார்.

Vidaamuyarchi AjithKumar Good Bad Ugly

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X