Vidaamuyarchi : டபுள் ஆக்ஷனில் அஜித்.. விடாமுயற்சி குறித்து ஒரு சுவாரஸ்ய அப்டேட்!
சென்னை : விடாமுயற்சி படத்தில் அஜித் டபுள் ஆக்ஷனில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அஜித்தின் துணிவு படத்தின் மகத்தான வெற்றிக்கு பிறகு அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவித்திருந்தனர்.
இதையடுத்து, அஜித் 62 படத்தை மகிழ்திருமேனி இயக்குவதாக தகவல் வெளியானது.

விடாமுயற்சி : அஜித் 62 திரைப்படம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில், அஜித் பிறந்த நாள் அன்று AK62 படம் குறித்து தகவல் வெளியானது. இப்படத்திற்கு விடாமுயற்சி என்று அஜித் வி சென்டிமெண்டிலேயே தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தின் இயக்குநர், வில்லன் யார், படப்பிடிப்பு எப்போது என்ற எந்த தகவலும் வெளியாகாததால் ரசிகர்கள் அடுத்தடுத்த அப்டேட்டை எதிர்பார்த்துள்ளனர்.
டவுள் ஆக்ஷன் : இந்நிலையில், விடாமுயற்சி படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் பற்றி அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தில் அஜித்குமார் இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார். இது தற்போது அவருடைய ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்திருக்கிறது. அசல் திரைப்படத்திற்கு பிறகு பல வருடங்கள் கழித்து அஜித் இத்திரைப்படத்தில் நடித்துள்ளார்.

கதாநாயகி யார் : அஜித் இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிப்பதால், அஜித்துக்கு இரண்டு கதாநாயகிகள் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார்கள். தற்போது கதாநாயகிகளை தேர்வு செய்யும் பணியை படக்குழு மும்முரமாக செய்து வருகிறது. அஜித் தனது உலக சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு மே 8ந் தேதி சென்னை திரும்பி உள்ளார். அவர் சுற்றுப்பயணம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
அஜித்தின் பிளான் : விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 70 நாட்கள் நடக்க இருப்பதாகவும், இதில், கடைசி 40 நாட்களில் அஜித் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பினை ஜூலை மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு தளபதி 68 படத்துடன் மோத பிளான் போட்டுள்தாகவும் கூறப்படுகிறது. படப்பிடிப்பு வேலைகள் முடிந்த பிறகு அஜித் ஆஸ்திரேலியா கண்டத்திற்கு வேர்ல்டு டூர் செல்ல இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











