VidaaMuyarchi: அஜித்துடன் இணையும் மலையாள பிரபலம்... விடாமுயற்சியில் ஆக்‌ஷன் ட்ரீட் கன்ஃபார்ம்!

சென்னை: அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. பிரம்மாண்டமாக உருவாகும் விடாமுயற்சியில் மலையாள பிரபலங்கள் சிலர் இணைந்துள்ளனர். அதிலும் முக்கியமாக தற்போது இணைந்துள்ள ஒரு நடிகருடன் அஜித் மோதிய ஆக்‌ஷன் சீன் குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

விடாமுயற்சியில் இணைந்த மல்லுவுட் பிரபலம்
துணிவு படத்தைத் தொடர்ந்து தனது 62வது படத்தில் நடித்து வருகிறார் அஜித். விடாமுயற்சி என்ற டைட்டிலில், ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். லைகா புரொடக்‌ஷனில் அனிருத் இசையமைக்கும் விடாமுயற்சி மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது விடாமுயற்சி ஷூட்டிங் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.

 VidaaMuyarchi: Malayalam Actor Maybu George Paul Playing Crucial Role In VidaaMuyarchi

திட்டமிட்டதை விட மிக தாமதமாகவே விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கியது. இதனால் அடுத்தடுத்த ஷெட்யூல்களுடன் வேகமாக படப்பிடிப்பை நடத்தி வருகிறார் மகிழ் திருமேனி. இதனையடுத்து தொடர்ச்சியாக அஜர்பைஜான் நாட்டில் விடாமுயற்சி படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ப்ரியா பவானி சங்கர், ரெஜினா உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுடன் மேலும் சில மலையாள பிரபலங்களும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களில் மேபு ஜார்ஜ் பால் தற்போது விடாமுயற்சி படத்தில் கமிட்டாகியுள்ளார். மலையாளத்தில் சில படங்களில் நடித்துள்ள மேபு ஜார்ஜ் பால், முதன்முறையாக அஜித்தின் விடாமுயற்சி மூலம் தமிழிலும் அறிமுகமாகிறார். அஜித்துடன் மேபு ஜார்ஜ் பால் மோதும் ஆக்‌ஷன் காட்சியை மகிழ் திருமேனி சமீபத்தில் இயக்கியுள்ளாராம்.

இந்தக் காட்சியில் அஜித்தும் மேபு ஜார்ஜ் பாலும் மட்டுமே நடித்துள்ளனர். சுமார் 2 நிமிடங்கள் வரை நடக்கும் இந்த ஆக்‌ஷன் சீன் தரமாக இருக்கும் என விடாமுயற்சி படக்குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே விடாமுயற்சி ஆக்‌ஷன் ஜானரில் உருவாகி வருவது அனைவரும் அறிந்ததே. ஆனால், சமீபத்தில் வெளியான தகவல்களின் படி பார்த்தால் விடாமுயற்சியில் ஆக்‌ஷன் ட்ரீட் கன்ஃபார்ம் என்றே சொல்லப்படுகிறது.

விடாமுயற்சி படப்பிடிப்பு முடிந்ததும் உடனடியாக ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் இணைகிறார் அஜித். ஏகே 63 என்ற டைட்டிலில் உருவாகவுள்ள இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படமும் அஜித் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X