படம் மண்ணுமாதிரி இருக்கு.. அனிருத் இல்லனா படம் ஒன்னுமே இல்ல.. கொந்தளித்த ரசிகர்!

சென்னை: இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்,த்ரிஷா நடித்த திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் அமெரிக்காவில் காலை 5 மணிக்கு வெளியான நிலையில், ஆந்திரா,பெங்களுர், தெலுங்கானவில் 6.30 மணிக்கு வெளியானது. தமிழகத்தில் ஸ்பெஷல் ஷோவா காலை 9 மணிக்கு இத்திரைப்படம் திரையிடப்பட்டது. அஜித்தின் தீவிர ரசிகரான ஒருவர், படம் வெளியானதும் பார்க்க வேண்டும் என்பதற்கான ஆந்திராவிற்கு சென்று காலை 6 மணி காட்சியை பார்த்துள்ளார்.

படம் குறித்து பேசிய அந்த தீவிர ரசிகர். என்னை பொறுத்த வரைக்கும் விடாமுயற்சி திரைப்படம் மகிழ் திருமேனி திரைப்படம் போலவும் இல்லை, தல அஜித் படம் போலவும் இல்லை. யாரோட படம் என்று சொல்ல முடியல. பிரேக் டவுன் திரைப்படத்தையும் வேறு ஒரு ஆங்கில படத்தையும் சேர்த்து ஏதோ ஒரு மாதிரி படத்தை எடுத்து வைத்து இருக்கிறார்கள். முதல் பாதியில், பேசிக்கிட்டே இருந்தாங்க ஒரே போரா இருந்தது. ரெண்டாவது பாதிலாவது கதை ஏதாவது இருக்கும் என்று பார்த்தா இரண்டாவது பாதிலையும் பேசிக்கிட்டே தான் இருக்காங்க.

vidaamuyarchi ajith fans

விடாமுயற்சி: விடாமுயற்சி திரைப்படம் ஒரு ஆக்ஷன் படம் சொன்னாங்க, சரி. ஆக்ஷனாவது எப்போ வரும் என்று பார்த்தால், செகண்ட் ஆஃப்க்கு பாதிக்கு மேல தான், அக்ஷன் சீக்குவன்ஸே வந்துச்சு அதுவும் கொஞ்ச நேரத்துல போயிடுச்சு, அதுக்கு அப்புறம் த்ரிஷா காணாம போனதா ஒரு கதையை சொல்லி இருக்காங்க. த்ரிஷா காணாம போனா என்ன... செத்தா என்ன என்கிற மாதிரி தான் தோணுச்சு. மொத்தத்துல படத்துல ஒரு மண்ணுமே இல்ல. அனிருத் மட்டும் படத்துல இல்லனா படம் இன்னைக்கே ஊத்தி மூடிடலாம். அனிருத் மட்டும்தான் இந்த படத்தை காப்பாத்தி இருக்கிறார் அவரோட இசை, பிஜிஎம்,பின்னணி இசை என அனைத்துமே சூப்பரா இருக்கு.

என்னடா படம்இது: இந்த படத்துல எனக்கு ரொம்ப புடிச்சி இருந்தது, ரத்தம் ஒரு சொட்டு பாடல் அந்த பாடலை கேட்கும் போது நல்லா இருந்தது. ஆனால், அந்த பாடலை காட்சியோட சேர்ந்து பார்க்கும் போது, சகிக்கவே இல்ல, சுத்தமா இந்த படத்துல சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஒரு மண்ணுமே இல்ல, ஏன்டா இந்த படத்தை எடுத்தாங்க. எதுக்குடா இந்த படத்தை பார்க்க வந்தேன் என்று தான் தோணுது. இந்த படத்தை பார்க்கிறதுக்காக தூக்கத்தை எல்லாம் விட்டு காலையில, இரண்டு மணிநேரம் பயணம் செய்து இங்கே வந்து பார்தேன். படத்தை பார்த்த பிறகு தான் எதுக்குடா படத்தை பார்த்தோம் என்று தோன்றுகிறது. எல்லாமே வேஸ்ட். படத்தில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஒன்னுமே இல்லை என பார்த்தா ரசிகர் ஒருவர் ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X