அஜித்தின் 'விடாமுயற்சி' ரிலீஸ் LIVE: எகிறும் வீக்கெண்ட் டிக்கெட் புக்கிங்.. வசூல் வேட்டை உறுதி!
சென்னை: கடந்த வருடம் தீபாவளிக்கு விடாமுயற்சி படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அது மிஸ் ஆனது. இந்த ஆண்டு பொங்கல் ரிலீஸ் என அறிவித்தும் கடைசி நேரத்தில் தள்ளிப்போனது. கவலைப்படாதீங்க மகிழ் நம்ம படம் வர நாள் தான் பண்டிகை என அஜித் சொன்ன நிலையில், அந்த பண்டிகை தேதி பிப்ரவரி 6ம் தேதியான இன்று தமிழ்நாட்டில் களைகட்டியிருக்கிறது.
விடாமுயற்சி திரைப்படம் தமிழ்நாட்டில் காலை 9 மணிக்குத்தான் திரையரங்குகளில் வெளியாகிறது. பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் அதிகாலை 6 மணிக்கே காட்சிகள் ஆரம்பித்துவிட்டன. ஆனால், அஜித் ரசிகர்கள் நாங்க சும்மா இருப்போமா என நள்ளிரவில் இருந்தே சென்னை ரோகிணி உள்ளிட்ட பல திரையரங்குகளில் அஜித் ரசிகர்கள் அலப்பறை செய்து கொண்டாடி வருகின்றனர்.
லைகா தயாரிப்பில் அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்ட பலர் நடிக்க அனிருத் இசையில் உருவாகியுள்ள விடாமுயற்சி படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. அந்த படத்தின் செலிபிரேஷன், விமர்சனங்கள் என அனைத்தும் இந்த லைவ்வில் பார்க்கலாம்.



Click it and Unblock the Notifications











