என்னது விடாமுயற்சியை விட்டுட்டாங்களா?.. உச்சக்கட்ட அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள்

சென்னை: விடாமுயற்சி படத்துடைய ஷூட்டிங்கின் முதல் ஷெட்யூல் அஜர்பைஜானில் நடந்து முடிந்தது. அதில் அஜித், திரிஷா, ரெஜினா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அங்கு ஷூட்டிங் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டதை அடுத்து தற்போது சென்னையில் படக்குழு குட்டி ரெஸ்ட் எடுத்துவருகிறது. அஜித்துக்கு சிறிய அறுவை சிகிச்சையும் முடிந்திருக்கிறது. அடுத்தக்கட்ட ஷுட்டிங்கிற்கான லொக்கேஷன் தேடும் பணியும் நடந்துவருவதாக கூறப்பட்ட சூழலில் படம் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. அந்தப் படத்தில் நடித்துகொண்டிருந்தபோதே தன்னுடைய 62ஆவது படத்தில் கமிட்டானார். அந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த வருடம் மே ஒன்றாம் தேதி படத்தின் பெயர் வைக்கப்பட்டது. அதோடு சரி; படத்திலிருந்து வேறு எந்தவிதமான அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Vidaamuyarchi Movie Shooting Temporarily Stopped by Lyca

அஜர்பைஜான் ஷூட்டிங்: அப்டேட் எதுவும் வெளியாகாமல் இருந்தாலும் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள்வரை அஜர்பைஜானில் படத்தின் ஷூட்டிங் தொடங்கி நடந்துவந்தது. படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடித்தனர். மங்காத்தா படத்துக்கு பிறகு அஜித் - திரிஷா - அர்ஜுன் கூட்டணி இதில் இணைந்திருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். படத்தின் ஷூட்டிங்கின்போது மிலனின் உயிரிழப்பு உள்ளிட்ட சோக சம்பவங்கள் நடந்தாலும் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்தது.

முதல் ஷெட்யூல் ஓவர்: அஜித் அஜர்பைஜானிலிருந்து சென்னை வந்து மீண்டும் அங்கு சென்று நடித்துக்கொடுத்தார். ஏறத்தாழ படத்தின் முக்கியமான காட்சிகள் அனைத்தையும் அஜர்பைஜானிலேயே மகிழ் திருமேனி ஷூட் செய்து முடித்துவிட்டதாக கூறப்பட்டது. அதனையடுத்து அஜர்பைஜான் ஷெட்யூல் முடிந்துவிட்டதாகவும் அடுத்த லொக்கேஷன் தேடும் பணியில் படக்குழு ஈடுபட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு காரணம்; எக்கச்சக்க செலவை மகிழ் திருமேனி இழுத்துவிட்டதுதான் அஜர்பைஜான் ஷெட்யூல் முடிய காரணம் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.

அடுத்தது எங்கே: தற்போது படக்குழு சென்னையில் இருக்கிறது. மார்ச் 15ஆம் தேதி படத்தின் அடுத்தக்கட்ட ஷூட்டிங் தொடங்கும் என்று புதிய தகவல் ஒன்று வெளியானது. ஆனால் ஷூட்டிங் குறித்த எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் விடாமுயற்சி படம் பற்றிய புதிய தகவல் ஒன்று கசிந்திருக்கிறது. அதாவது லைகா தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதன் காரணமாக அடுத்தக்கட்ட ஷூட்டிங்கை இன்னும் ஒரு மாதம் கழித்து வைத்துக்கொள்ள முடிவு செய்திருப்பதாகவும்; அதற்கு அஜித்தும் ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.

குட் பேட் அக்லி: இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு அஜித் நடிக்கும் 63ஆவது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி குட் பேட் அக்லி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் அப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கவிருக்கும் அப்படமானது அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X