தீபாவளிக்கு ரிலீஸாகிறதா விடாமுயற்சி?.. என்னங்க சொல்றீங்க.. இதெல்லாம் சாத்தியமா

சென்னை: அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். லைகா நிறுவனம் படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். மகிழ் திருமேனி படத்தை இயக்குகிறார். முதன்முறையாக அஜித்துடன் மகிழ் திருமேனி இணைந்திருப்பதால் கண்டிப்பாக இந்தப் படம் ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கை ஏகே ரசிகர்களிடம் இருக்கிறது. இப்போது அஜித் பைக் டூரில் இருக்கிறார். அவருடன் ஆரவ் உள்ளிட்டோரும் சென்றிருக்கின்றனர். சூழல் இப்படி இருக்க விடாமுயற்சி படத்தின் அடுத்தக்கட்ட ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

தமிழ் சினிமாவின் டாப் 3 ஹீரோக்களில் ஒருவரான அஜித்குமார் கடைசியாக துணிவு படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் சூப்பர் ஹிட்டடித்தது. எப்போதும் ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டு அடுத்த படத்தில் கமிட்டாகும் அஜித்குமார் தன்னுடைய 62ஆவது படத்தில் துணிவு படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே கமிட்டானார். அதனை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் படத்தின் இரண்டாம் பாதி தயாரிப்பு தரப்புக்கு திருப்தி இல்லாததால் அதிலிருந்து வெளியேறினார்.

Vidaamuyarchi Movie Will Hits on Screen at November Here are the details

விடாமுயற்சி: விக்னேஷ் சிவன் வெளியேறிய பிறகு அஜித் 62 ஆவது படத்தை இயக்குவதற்கு மகிழ் திருமேனி கமிட்டானார். படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. பெயர் அறிவிக்கப்பட்டதோடு சரி; அதற்கு பிறகு வேறு எந்த அப்டேட்டும் இதுவரை படத்திலிருந்து வெளியாகவில்லை. ஆகினும் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்தது.

நட்சத்திர பட்டாளம்: இந்தப் படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளராக ஓம் பிரகாஷ் பணியாற்றுகிறார். முன்னதாக நீரவ் ஷா பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. ஆக்‌ஷன் ஜானரில் மகிழ் திருமேனி ஸ்டைலில் இந்தப் படம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாதாரண ஒன் லைன்தான் என கூறப்பட்டாலும் அதனை மகிழ் பக்கா திரைக்கதையோடு ப்ரெசண்ட் செய்வார் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

அடுத்த லொக்கேஷன்: அஜித்தும் மும்முரமாக நடித்துவந்த சூழலில் அஜர்பைஜான் ஷெட்யூல் முடிந்ததாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதுகுறித்து அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா புகைப்படங்களை பதிவிட்டு தெரிவித்ததோடு புதிய லொக்கேஷன் தேடும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அநேகமாக அடுத்தக்கட்ட ஷூட்டிங் சென்னையில் செட் போட்டு நடக்கும் இல்லையென்றால் வேறு மாநிலத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே அஜித் இப்போது பைக் டூரில் இருக்கிறார்.

தீபாவளிக்கு ரிலீஸ்: அஜித் பைக் டூரை விரைவில் முடிப்பார் என்றும் அடுத்தது விடாமுயற்சி ஷூட்டிங்தான் என்றும் கோடம்பாக்கத்தில் பேச்சு ஓடுகிறது. சில நாட்களுக்கு முன்புகூட விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி ட்ரெண்டானது. இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய மகிழ் திருமேனி திட்டமிட்டிருப்பதாகவும்; இப்போது தொடங்கவிருக்கும் ஷூட்டிங்கை ஒரேகட்டமாக முடிப்பதற்கு பக்கா ஷெட்யூல் போட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X