தீபாவளிக்கு வெளியாகுமா விடாமுயற்சி?.. என்னதான் நடக்குதோ?.. ரசிகர்கள் கேள்வி

சென்னை: அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. அந்தப் படத்தில் நடித்துகொண்டிருந்தபோதே தன்னுடைய 62ஆவது படத்தில் கமிட்டானார். அந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த வருடம் மே ஒன்றாம் தேதி படத்தின் பெயர் வைக்கப்பட்டு அஜர்பைஜானில் நடந்தது. இப்போது படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். மகிழ் திருமேனி இயக்கும் அந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வராவிட்டாலும் படத்தின் ஷூட்டிங் முதல் ஷெட்யூல் அஜர்பைஜானில் தொடங்கி நடந்து முடிந்தது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் அஜித்தின் பிஆர் ஓ சுரேஷ் சந்திரா வெளியிட்டிருந்தார். இதனால் படம் உயிர்ப்போடுதான் இருக்கிறது என்று அவரது ரசிகர்கள் நிம்மதியடைந்தனர்.

Vidaamuyarchi Ajith Magizh Thirumeni


அடுத்தக்கட்ட ஷூட்டிங்: அஜர்பைஜானில் ஷூட்டிங் முடிந்தாலும் அடுத்தக்கட்ட ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்று தெரியாமல் அவரது ரசிகர்கள் குழம்பியிருந்தனர். மீண்டும் அஜர்பைஜானிலேயே ஷூட்டிங்கை நடத்த படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகின. மேலும் படக்குழுவும் அங்கு செல்வதற்கான வேலைகளை லைகா தொடங்கியிருப்பதாகவும் கூறப்பட்டது. அதேசமயம் லைகாவுக்கு பண பிரச்னை ஏற்பட்டதன் காரணமாக விடாமுயற்சி ஷூட்டிங்கை தற்காலிகமாக நிறுத்திவிட்டதாகவும் ஒரு தகவல் ஓடியது.

மருத்துவமனையில் அனுமதி: இப்படி விடாமுயற்சியை சுற்றி பல தகவல்கள் சுற்றிக்கொண்டிருக்க ஏகே ரசிகர்களின் தலையில் இடி இறங்கும்படி சில மாதங்களுக்கு முன்பு ஒரு தகவல் பரவியது. அதன்படி அஜித் தனது உடலை முழு பரிசோதனை செய்வதற்காக சென்றபோது அவருக்கு காதிலிருந்து மூளைக்கு செல்லும் நரம்பில் சிறிய அளவிலான வீக்கம் இருந்ததால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

குட் பேட் அக்லி: இதனையடுத்து உடல்நலம் தேறினார். பிறகு, ஏகேவின் ரசிகர்கள் விடாமுயற்சி பற்றிய அப்டேட்டை எதிர்பார்த்திருந்த சூழலில் யாரும் எதிர்பார்க்காதவகையில் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தை வைத்து இயக்கும் குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. மேலும் படத்தின் ஷூட்டிங்கும் மும்முரமாக நடந்துவருகிறது. இருந்தாலும் விடாமுயற்சியின் நிலைமை என்னதான் ஆனது என்ற கவலை ரசிகர்களிடையே இல்லாமல் இல்லை.

விடாமுயற்சி அப்டேட்: இந்நிலையில் விடாமுயற்சி படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி படத்தின் ஷூட்டிங் இன்னும் ஒரு ஷெட்யூல் மட்டும்தான் இருக்கிறது என்றும்; அதில் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் அஜர்பைஜானில் அல்லது புனேவில் படத்தின் ஷூட்டிங்கை நடத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும்; தீபாவளிக்கு ரிலீஸ் ஆக குறைவான வாய்ப்புகளே இருப்பதாகவும் பேச்சு ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X