VidaaMuyarchi: அஜித்தின் விடாமுயற்சியில் பிரியா பவானி சங்கர்... ட்ரெண்டான ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ!!

அஜர்பைஜான்: துணிவு படத்தைத் தொடர்ந்து அஜித் தற்போது விடாமுயற்சியில் கமிட்டாகியுள்ளார்.

மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் இதுவரை தொடங்கவில்லை.

VidaaMuyarchi: Priya Bhavani Shankars photo trending from Ajiths VidaaMuyarchi shooting spot

இந்நிலையில் விடாமுயற்சி படத்தில் பிரியா பவானி சங்கர் இணைந்துள்ளது உறுதியாகியுள்ளது.

மேலும், அவர் விடாமுயற்சி படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் சென்றுள்ள போட்டோவும் ட்ரெண்டாகி வருகிறது.

விடாமுயற்சியில் இணைந்த பிரியா பவானி சங்கர்
அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியாகி வெற்றிப் பெற்றது. அதனைத் தொடர்ந்து அவரது 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவிருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் அவர் விலகியதால், ஏகே 62 இயக்குநர் வாய்ப்பு மகிழ் திருமேனிக்குச் சென்றது. அதன்படி லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கும் ஏகே 62 படத்தின் டைட்டில் 'விடாமுயற்சி' என கன்ஃபார்ம் ஆனது.

VidaaMuyarchi: Priya Bhavani Shankars photo trending from Ajiths VidaaMuyarchi shooting spot

அஜித் பிறந்தநாளான மே 1ம் தேதி விடாமுயற்சி டைட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் உடனடியாக படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அஜித் பைக் ட்ரிப் சென்றிருந்தார். அதுமட்டும் இல்லாமல் விடாமுயற்சி ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகளும் முடியாமல் இருந்தது. இதனால் விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்காமல் தாமதமாகிக் கொண்டே இருந்தது. இந்நிலையில், விரைவில் விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கும் என லைகா சுபாஸ்கரன் சமீபத்தில் கூறியிருந்தார்.

விடாமுயற்சி படத்திற்காக அஜித் தனது கெட்டப், லுக் ஆகியவற்றை முழுமையாக மாற்றிவிட்டார். வழக்கம்போல சால்ட் & பெப்பர் ஹேர் ஸ்டைல் என்றாலும், அதிலும் சில வித்தியாசங்கள் இருப்பது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது. இந்தப் படத்தில் அஜித்துடன் த்ரிஷா, ஆரவ் ஆகியோர் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இப்போது அவர்களுடன் ப்ரியா பவானி சங்கரும் இணைந்துள்ளது உறுதியாகியுள்ளது.

VidaaMuyarchi: Priya Bhavani Shankars photo trending from Ajiths VidaaMuyarchi shooting spot

விடாமுயற்சி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெறவுள்ளது. அதற்காக அஜித், இயக்குநர் மகிழ் திருமேனி ஆகியோர் ஏற்கனவே அஜர்பைஜான் சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது. அவர்களைத் தொடர்ந்து பிரியா பவானி சங்கரும் தற்போது அஜர்பைஜானில் லேண்டிங் ஆகிவிட்டார். அஜர்பைஜான் விமான நிலையத்தில் எடுத்துள்ள போட்டோவை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் போஸ்ட் போட்டுள்ளார் பிரியா பவானி சங்கர்.

இதனால், விரைவில் விடாமுயற்சி படப்பிடிப்பு ஆரம்பமாகும் என சொல்லப்படுகிறது. இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர் இணைந்துள்ளதும் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் அப்டேட்டாக அமைந்துள்ளது. அதேநேரம் இதுபற்றி படக்குழு தரப்பில் இருந்து இன்னும் அபிஸியலாக அப்டேட் எதுவும் வெளியாகவில்லை. அஜர்பைஜானில் தொடங்கும் விடாமுயற்சி ஷூட்டிங், அடுத்து துபாய் உள்ளிட்ட மேலும் சில நாடுகளில் நடைபெறும் என சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X