VidaaMuyarchi: ப்ரீ ரிலீஸ் பிசினஸில் அதிரடி காட்டிய விடாமுயற்சி... இதுதான்யா அஜித்தோட பவர்!

சென்னை: அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

லைகா தயாரிக்கும் இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார்.

இந்த வாரம் முதல் விடாமுயற்சி படத்தின் அப்டேட் வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸ் தாறுமாறாக தொடங்கியதாக சொல்லப்படுகிறது.

VidaaMuyarchi: Sun TV bagged VidaaMuyarchi Satellite rights for a record price

ப்ரீ-ரிலீஸ் பிசினஸில் அதிரடி காட்டும் விடாமுயற்சி


கோலிவுட்டின் மாஸ் ஹீரோக்களில் ஒருவரான அஜித், லைகா தயாரிக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. அஜித்துடன் த்ரிஷா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் விடாமுயற்சியில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் தொடங்கியது குறித்து லைகா நிறுவனம் அபிஸியலாக அறிவிக்கவில்லை. அதேபோல், அஜித்துடன் நடிப்பவர்கள் பற்றிய அப்டேட்டும் வெளியாகவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் தொடர்ந்து விடாமுயற்சி அப்டேட் கேட்டு வருகின்றனர். இதனையடுத்து இந்த வாரம் முதல் விடாமுயற்சி அப்டேட்டை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம்.


அதன்படி, விடாமுயற்சி படத்தின் முதல் அப்டேட் எப்போது வேண்டுமானாலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே விடாமுயற்சி படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸ் தொடங்கிவிட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி, இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி வாங்கியுள்ளதாகவும், இதற்காக பல கோடிகள் வரை பிசினஸ் நடைபெற்றுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

அதேபோல், ஓடிடி ரைட்ஸ் பிஸினஸும் தொடங்கியதாகத் தெரிகிறது. இதனை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் நடித்த துணிவு திரைப்படம் இந்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸானது. விஜய்யின் வாரிசு படத்துடன் மோதிய துணிவு, சிறப்பான ஓபனிங் உடன் பாக்ஸ் ஆபிஸில் கெத்து காட்டியது. இதனால், விடாமுயற்சி படத்தின் ப்ரீ ரிலீஸ் பிஸினஸும் இப்போதே தீவிரமாக நடந்து வருவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அஜர்பைஜானில் நடைபெற்று வரும் விடாமுயற்சி ஷூட்டிங்கில், ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. சில தினங்களுக்கு முன்னர் விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ், வீடியோஸ் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X