விடாமுயற்சி கலை இயக்குநர் மரணம்.. படக்குழு எடுத்திருக்கும் முடிவு இதுவா?.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
சென்னை: Vidaamuyarchi Milan (விடாமுயற்சி மிலன்) விடாமுயற்சி கலை இயக்குநர் மிலன் உயிரிழந்ததை அடுத்து விடாமுயற்சி டீம் ஒரு முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு படம் வெளியானது. அந்தப் படம் வாரிசுக்கு போட்டியாக களமிறங்கி பெரும் வெற்றி பெற்றது. வசூல் ரீதியாக மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை படம் பெற்றது. இதன் காரணமாக அஜித்தும் அவரது ரசிகர்களும் உற்சாகமடைந்தனர். நிலைமை இப்படி இருக்க துணிவு படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே அஜித் தன்னுடைய 62ஆவது படத்தில் கமிட்டானார்.

விடாமுயற்சி: முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. பிறகு அவர் வெளியேறியதால் மகிழ் திருமேனி உள்ளே வந்தார். அதனையடுத்து மே 1ஆம் தேதி படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டது. பெயருக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனத்தை கொடுத்தாலும் மகிழ் திருமேனி இயக்கம் என்பதால் ரசிகர்கள் படத்தின் மீது உச்சக்கட்ட நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.
ஷூட்டிங் லேட்: படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டவுடன் ஷூட்டிங் உடனடியாக தொடங்கும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அஜித்தோ பைக்கை எடுத்துக்கொண்டு உலக சுற்றுப்பயணத்துக்கு கிளம்பினார். வெளிநாடுகளில் சுற்றிவிட்டு வந்த சூழலில் லைகாவில் திடீரென அமலாக்கத்துறை சோதனை நடந்தது. இதனையடுத்து ஷூட்டிங் மேற்கொண்டு தாமதம் ஆகியது.
தொடங்கிய ஷூட்டிங்?: வலிமை படத்தின் அப்டேட்டுக்கு எப்படி அஜித் ரசிகர்கள் காத்திருந்தனரோ அதே அளவு ஏன் அதைவிட அதிகமாகவே விடாமுயற்சி அப்டேட்டுக்கு காத்திருக்க ஆரம்பித்திருக்கின்றனர். ஆனால் லைகா நிறுவனமோ எந்த அப்டேட்டையும் வெளியிடாமல் இருக்கிறது. அதேசமயம் அஜர்பைஜான் நாட்டில் விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கிவிட்டதகாவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.
மிலன் மரணம்: இந்நிலையில் அஜர்பைஜானில் விடாமுயற்சி கலை இயக்குநர் மாரடைப்பால் உயிரிழந்தார். ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அஜித் ரொம்பவே அப்செட் ஆகியிருக்கிறார் என்றும் ஷூட்டிங்கை கேன்சல் செய்யவும் சொல்லிவிட்டார் எனவும் சொல்லப்படுகிறது. அஜித்துக்கு மிலன் ரொம்பவே நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விடாமுயற்சியில் மகன்?: சூழல் இப்படி இருக்க மிலன் மரணமடைந்துவிட்டதால் அடுத்தக்கட்டமாக என்ன முடிவு எடுக்கலாம் என்ற யோசனையில் படக்குழு இருந்ததாம். ஆனால் மிலனின் மகனுக்கும் கலை இயக்கத்தின் மீது ஆர்வம் இருப்பதால் அவரை இந்தப் படத்தில் பயன்படுத்தலாம் என்ற முடிவுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது. இருந்தாலும் இது எவ்வளவு தூரம் என்பது தெரியவில்லை. ஒருவேளை அவ்வாறு நடந்தால் அது விடாமுயற்சி டீமின் நல்ல மனதை எதிரொலிப்பதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











