Vidaamuyarchi: விடாமுயற்சி டிரைலரில் விவாகரத்து குறித்து மறைமுகமாக பேசிய அஜித்.. அதை கவனிச்சீங்களா?
சென்னை: அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி படம் வரும் பிப்ரவரி 6ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு, அதன் பின்னர் சில காரணங்களால் ரிலீஸ் தேதியில் மாற்றங்கள் செய்யப்பட்டது. இப்படியான நிலையில் படத்தின் டிரைலர் நேற்று அதாவது ஜனவரி 16ஆம் தேதி மாலை 6.40க்கு ரிலீஸ் செய்யப்பட்டது. டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. 12 மணி நேரத்தில் டிரைலரை 7 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளார்கள்.
டிரைலரில் அஜித்குமார் த்ரிஷாவிடம் ஒரு டயலாக் பேசுகின்றார். அதாவது, எனக்கு இந்த ஜெனரேஷன் பற்றி தெரியாது கயல். ஆனா நாங்க சின்ன புள்ளையா இருக்கும்போது வாட்ச் கெட்டுப்போச்சுனா ரிப்பேர் பண்ணுவோம், டிவி கெட்டுப்போச்சுனா ரிப்பேர் பண்ணுவோம், தூக்கி போடமாட்டோம்" என்ற டயலாக் ரசிகர்கள் மத்தியில் தனி கவனத்தினை ஈர்த்துள்ளது. அஜித் பேசும் இந்த டயலாக் பல உள்ளர்த்தங்களைக் கொண்டதாக, உள்ளது.

வழக்கமாகவே அஜித்குமார் தனது ரசிகர்களுக்கு பொதுவான ஒரு அறிவுரையை எப்போதும் கூறுவார். அதாவது, படிப்பவர்கள் நன்றாக படியுங்கள், வேலைக்குப் போகின்றவர்கள் இன்னும் அதிகமாக உழையுங்கள். உங்களின் குடும்பத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்பதுதான் அது. இந்த அறிவுரையை அவர் சமீபத்தில் கலந்து கொண்ட கார் ரேஸின் போது கூட, வீடியோவாக வெளியிட்டு தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது.

விவாகரத்து: மேலே குறிப்பிட்டுள்ள விடாமுயற்சி டிரைலரில் அஜித்குமார் பேசும் டயலாக், குடும்ப வாழ்க்கையோடும், காதல் வாழ்க்கையோடும் பொருத்திப் பார்க்கும்போது கச்சிதமாகப் பொருந்துகின்றது. அதாவது கணவன் மனைவிக்குள் எதாவது பிரச்சனை என்றால், அதனை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். அதைவிட்டுவிட்டு, விவாகரத்து என எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவு எடுக்ககூடாது என சொல்லாமல் சொல்கின்றார் அஜித். . விவாகரத்து என்பது அவரவர் விறுப்ப முடிவுதான் என்றாலும், சமகாலத்தில் அது அதிகரித்து வருகின்றது. அது வீட்டில் பெற்றோர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற திருமணமாக இருந்தாலும் சரி, காதல் திருமணம் செய்து கொண்டவர்களாக இருந்தாலும் சரி.

பிரேக் அப்: அதேபோல், இன்றைய காலகட்டத்தில் காதலில் இருந்து காதலர்கள் வெளியேறுவது என்பது அதிகரித்துவிட்டது. பேசிப் புரிந்துகொள்ள வேண்டிய காரணங்களாக இருந்தபோதும், காதலில் இருந்து வெளியேற இந்தத் காலகட்டத்தில் காதலர்கள் தயங்குவதில்லை என்பதைத்தான் மறைமுகமாக அஜித் பேசும் டயலாக் அமைந்துள்ளது என இணையவாசிகள் கூறிவருகின்றனர். இந்த டயலாக் தற்போது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.



Click it and Unblock the Notifications











