VidaaMuyarchi: உறுதியானது விடாமுயற்சி ரிலீஸ் தேதி... அஜித் பிறந்தநாளில் ஆக்‌ஷன் ட்ரீட் ரெடி..?

சென்னை: அஜித்தின் 62வது படமான விடாமுயற்சி ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது.

மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

அஜித்துடன் த்ரிஷா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு கன்ஃபார்ம் செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

 VidaaMuyarchi: VidaaMuyarchi Film will be released on Ajiths birthday, May 1

விடாமுயற்சி ரிலீஸ் தேதி அப்டேட்

அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். துணிவு வெளியானதுமே இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்பட்டது. அஜித்தின் 62வது படமான இதனை லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் விக்னேஷ் சிவனுக்குப் பதிலாக மகிழ் திருமேனி இயக்குநராக கன்ஃபார்ம் ஆனார்.

இதனால், ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகளுக்காக ஏகே 62 ஷூட்டிங் உடனே தொடங்காமல் இருந்தது. அதேநேரம், அஜித் பிறந்தநாளான மே 1ம் தேதி ஏகே 62 படத்தின் டைட்டில் விடாமுயற்சி என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்தப் படத்தின் ஷூட்டிங், கடந்த மாதம் அஜர்பைஜான் நாட்டில் தொடங்கியது. இதற்காக அஜித், த்ரிஷா, ப்ரியா பவானி சங்கர், இயக்குநர் மகிழ் திருமேனி உள்ளிட்ட படக்குழுவினர் அஜர்பைஜான் சென்றிருந்தனர்.

ஏற்கனவே விடாமுயற்சி படப்பிடிப்பு தாமதமாக தொடங்கப்பட்டதால், தற்போது பிரேக் இல்லாமல் அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அஜித் மட்டும் அஜர்பைஜானில் இருந்து திடீரென சென்னை திரும்பிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு துபாயில் தொடங்கவிருப்பதாகவும், அதற்காக சில நாட்கள் பிரேக் விடப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இதனிடையே அஜித் ரசிகர்கள் அடிக்கடி விடாமுயற்சி படத்தின் அப்டேட் கேட்டு வருகின்றனர். அஜித்தின் ஃபர்ஸ்ட் லுக், ஃபர்ஸ்ட் சிங்கிள் அல்லது க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகுமா என எதிர்பார்த்துள்ளனர். ஆனால் விடாமுயற்சி டீம், தற்போதைக்கு படப்பிடிப்பில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருகிறதாம். அதேநேரம் விடாமுயற்சி ரிலீஸ் தேதியை முடிவு செய்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, அஜித் பிறந்தநாள் ஸ்பெஷலாக விடாமுயற்சி ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2024 மே 1ம் தேதி அஜித்தின் பிறந்தநாளுக்கு விடாமுயற்சி வெளியாகலாம் என உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. மே 1ம் தேதி புதன் கிழமையாக இருந்தாலும், தனது வியாழன் ரிலீஸ் சென்டிமென்ட்டை விட்டுவிட்டு அஜித்தும் ஓக்கே சொல்லிவிட்டதாகத் தெரிகிறது. இதனால், ஜனவரி இறுதிக்குள் விடாமுயற்சி ஷூட்டிங் முடிவுக்கு வரும் எனக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X