VidaaMuyarchi: விடாமுயற்சி ஷூட்டிங்கில் வேகம் காட்டும் லைகா... ஆக்‌ஷன் மோடுக்கு மாறிய அஜித்!

பாகு: அஜித் தற்போது லைகா தயாரிக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நேற்று தொடங்கியது.

இதற்காக அஜித், த்ரிஷா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட மொத்த படக்குழுவும் அஜர்பைஜான் சென்றுள்ளது.

இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அஜித்தின் ஆக்‌ஷன் காட்சிகளுடன் தொடங்கியுள்ளதாம்.

 VidaaMuyarchi: VidaaMuyarchi shooting started with Ajiths action sequences

ஆக்‌ஷன் மோடுக்கு மாறிய அஜித்
அஜித் நடிப்பில் லைகா தயாரிக்கும் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் நேற்று தொடங்கியது. அஜர்பைஜான் நாட்டில் தொடங்கிய இந்த படப்பிடிப்பில் அஜித், த்ரிஷா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். விடாமுயற்சி முதலில் ஏகே 62 என்ற டைட்டில் தொடங்கப்பட்டது. அதன்படி இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த மார்ச் மாதமே தொடங்கப்பட வேண்டியது.

ஆனால், விக்னேஷ் சிவனுக்குப் பதிலாக மகிழ் திருமேனி இயக்குநராக கமிட்டானதால் விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், பல மாதங்களுக்குப் பின்னர் தற்போது விடாமுயற்சி படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கியுள்ளது. மகிழ் திருமேனி தனது டீமுடன் அசுர வேகத்தில் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் போல குறைந்த நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க மகிழ் திருமேனி முடிவு செய்துள்ளாராம்.

அதன்படி நேற்று தொடங்கிய விடாமுயற்சி ஷூட்டிங் அஜித்தின் ஆக்‌ஷன் போர்ஷனுடன் தொடங்கியுள்ளது. சுப்ரீம் சுந்தர் தலைமையிலான டீம், அஜித்துடன் வெறித்தனமாக மோதும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. மேலும், ஸ்பாட்டிலேயே எடிட்டிங் வேலைகளையும் பார்த்து வருகிறாராம் மகிழ் திருமேனி. அதாவது விடாமுயற்சி எடிட்டர் ஸ்ரீகாந்த், ஷூட்டிங் ஸ்பாட்டிங்லேயே எடிட் செய்து வருகிறாராம்.

இதனால் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளுக்காக அதிக நாட்கள் செலவிட தேவையிருக்காது என ரொம்பவே அட்வான்ஸாக பிளான் செய்துள்ளார் மகிழ் திருமேனி. பொதுவாகவே தனது படங்களின் எடிட்டிங், போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளுக்காக அதிக நாட்கள் எடுத்துக்கொள்வது மகிழ் திருமேனியின் வழக்கம். இதனால் லைகா நிறுவனம் கையோடு எடிட்டர் ஸ்ரீகாந்துக்கும் டிக்கெட் போட்டு அஜர்பைஜான் அனுப்பிவிட்டதாக சொல்லப்படுகிறது.

முழுக்க முழுக்க ஆக்‌ஷன் ஜானரில் உருவாகும் விடாமுயற்சி, அஜித் ரசிகர்களுக்கு தரமான ட்ரீட்டாக இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது. அஜர்பைஜானை தொடர்ந்து துபாயில் விடாமுயற்சி ஷூட்டிங் நடைபெறும் என சொல்லப்படுகிறது. அதன்பின்னர் ஃபைனல் ஷெட்யூல் சென்னையில் நடைபெறும் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X