VidaaMuyarchi: விடாமுயற்சி ஸ்பாட்டில் சோகம்... விடாமல் துரத்தும் சோதனை... பேக்கப் சொன்ன அஜித்!

சென்னை: அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வந்தது.

 VidaaMuyarchi: VidaaMuyarchi shooting was canceled due to Art Director Milans Demise

விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கி ஒரே வாரத்தில் அவசரமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

ஆர்ட் டைரக்டர் மிலன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததால், விடாமுயற்சி ஷூட்டிங் ட்ராப் ஆகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விடாமுயற்சியை விடாமல் துரத்தும் சோதனை
கோலிவுட் மாஸ் ஹீரோவான அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். நீண்ட நாட்களாக எந்த அப்டேட்டும் இல்லாமல் சைலண்டாக இருந்த விடாமுயற்சி, கடந்த வாரம் படப்பிடிப்புடன் தொடங்கியது.

துணிவு வெளியாகும் முன்பே லைகாவின் ஏகே 62 படத்தில் சைன் செய்திருந்தார் அஜித். அப்போது ஏகே 62 படத்தின் இயக்குநராக விக்னேஷ் சிவனும், இசையமைப்பாளராக அனிருத்தும் கமிட்டாகியிருந்தனர். இதனால், துணிவு ரிலீஸானதுமே விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்பட்டது. அதன்படி பிப்ரவரியில் தொடங்கவிருந்த ஏகே 62 ஷூட்டிங், திடீரென ஒத்தி வைக்கப்பட்டது.

விக்னேஷ் சிவன் சொன்ன கதையில் திருப்தி இல்லாததால், கடைசி நேரத்தில் அவரை ஏகே 62வில் இருந்து நீக்கியது லைகா. அதன்பின்னர் அவசரமாக தான் மகிழ் திருமேனியை புக் செய்தனர். அவர் சொன்ன ஒன்லைன் பிடித்துப் போனாலும் ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகளுக்காக தாமதம் ஆனது. ஆனாலும், ஏகே 62 டைட்டிலை மட்டும் அஜித் பிறந்தநாளில் அறிவித்தனர். அதன்படி விடாமுயற்சி என டைட்டில் கன்ஃபார்ம் ஆனாலும், மீண்டும் ஷூட்டிங் தொடங்குவதில் தாமதமானது.

அஜித்தும் தொடர்ந்து பைக் டூர் செல்வதில் மட்டுமே அதிக ஆர்வம் காட்டினார். இதனால், ஒவ்வொரு மாதமும் விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கும் என தகவல்கள் மட்டுமே வெளியாகின. இறுதியாக சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழாவில் விரைவில் விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கும் எனக் கூறினார். அதன்படி கடந்த வாரம் தான் படப்பிடிப்புத் தொடங்கியதாக சொல்லப்படுகிறது.

அஜர்பைஜான் நாட்டில் தொடங்கிய இந்தப் படப்பிடிப்பில், அஜித், த்ரிஷா, ப்ரியா பவானி சங்கர், மகிழ் திருமேனி, ஆர்ட் டைரக்டர் மிலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்நிலையில், இன்று காலை ஆர்ட் டைரக்டர் மிலன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அஜித்தின் நெருங்கிய நண்பரான மிலன், பில்லா, வீரம், வேதாளம், துணிவு ஆகிய படங்களிலும் ஆர்ட் டைரக்டராக பணிபுரிந்துள்ளார்.

இதனால், மிலனின் உயிரிழப்பை தாங்கிக்கொள்ள முடியாத அஜித், உடனே விடாமுயற்சி படப்பிடிப்புக்கு பேக்கப் சொல்லிவிட்டதாக தெரிகிறது. ஆரம்பம் முதலே பல தடைகளையும் சோதனைகளையும் சந்தித்து வருகிறது விடாமுயற்சி. இதனால், அஜித் ரசிகர்களும் பெரும் சோகத்தில் உறைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X