VidaaMuyarchi: அஜித் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. விடாமுயற்சி ஃபர்ஸ்ட்லுக் ரெடி.. இனி அப்டேட் மழை தான்

சென்னை: அஜித்தின் விடாமுயற்சி படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்தப் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வரும் 7ம் தேதி தொடங்கவுள்ளது.

vidaamuyarchi-vidaamuyarchi-team-planning-to-release-the-first-look-poster-for-new-year

விடாமுயற்சி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியானது. இந்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸான துணிவு, பாக்ஸ் ஆபிஸில் 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இதனையடுத்து அஜித்தின் ஏகே 62 ஷூட்டிங் உடனடியாக தொடங்கும் என சொல்லப்பட்டது. ஆனால், ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகியதால், அவருக்குப் பதிலாக மகிழ் திருமேனி இயக்குநராக கமிட்டானார்.

இதனால் ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகள் தாமதமாக, ஒரு வழியாக கடந்த மாதம் தான் விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கியது. அஜர்பைஜான் நாட்டில் தொடங்கிய விடாமுயற்சி படப்பிடிப்பு அசுர வேகத்தில் நடைபெற்றது. தற்போது பிரேக் விடப்பட்டுள்ள நிலையில், இரண்டாவது கட்ட படப்பிடிப்பு வரும் 7ம் தேதி தொடங்கவுள்ளதாம். இதுவும் அஜர்பைஜானில் நடைபெறவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த ஷெட்யூல் தொடர்ச்சியாக 70 நாட்கள் வரை நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு விடாமுயற்சி மொத்த படப்பிடிப்பும் நிறைவுபெறும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், அஜித் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க முடிவு செய்துள்ளது லைகா. தொடர்ந்து விடாமுயற்சி அப்டேட் கேட்டு வரும் ரசிகர்களுக்காக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியாகிறதாம்.

புத்தாண்டு ஸ்பெஷலாக டிசம்பர் 31 மாலை அல்லது ஜனவரி 1ம் தேதி வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனைத் தொடர்ந்து பொங்கலுக்கு ஃபர்ஸ்ட் சிங்கிள் அல்லது டீசர் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனல் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். தற்போது தொடங்கும் இரண்டாவது கட்ட படப்பிடிப்பிற்காக அஜித் விரைவில் அஜர்பைஜான் செல்லவுள்ளாராம்.

அஜித்துடன் த்ரிஷா, ப்ரியா பவானி சங்கர், ரெஜினா, அர்ஜுன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். விடாமுயற்சி படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ஆக்‌ஷன் ஜானரில் செம்ம த்ரில்லரான மூவியாக உருவாகி வரும் விடாமுயற்சி, ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு, அடுத்தாண்டு மே 1ம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X