அதிர்ச்சி.. விடாமுயற்சி பட கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் மரணம்.. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்

சென்னை: பிரபல கலை இயக்குநரான மிலன் இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார், த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படம் அஜர்பைஜானில் ஷூட்டிங் நடைபெற்று வரும் நிலையில், அஜர்பைஜானில் மாரடைப்பு ஏற்பட்டு மிலன் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Vidamuyarchi Art Director Milan passes away due to heart attack

நடிகர் அஜித் குமாரின் பில்லா, வீரம், வேதாளம், துணிவு என பல படங்களில் மிலன் பணியாற்றி உள்ளார். விஜய்யின் வேலாயுதம், வேட்டைக்காரன் உள்ளிட்ட படங்களுக்கு இவர் தான் கலை இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது. கலை இயக்குநர் மிலன் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சிட்டிசன் படத்தில் இருந்தே: ஆரம்ப காலத்தில் கலை இயக்குநர் சாபு சிரிலின் உதவியாளராக பணியாற்றிய மிலன் ஃபெர்னாண்டஸ் அஜித்தின் சிட்டிசன், வில்லன், ரெட் மற்றும் விஜய்யின் தமிழன், ஷங்கர் இயக்கிய அந்நியன் உள்ளிட்ட படங்களில் உதவி கலை இயக்குநராக பணியாற்றி உள்ளார்.

Vidamuyarchi Art Director Milan passes away due to heart attack

அஜித்தின் ஆஸ்தான கலை இயக்குநர்: நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த பல படங்களுக்கு மிலன் தான் கலை இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது. பில்லா, வீரம், வேதாளம், துணிவு மற்றும் விடாமுயற்சி படத்திற்கும் கலை இயக்குநராக பணியாற்றி வந்த மிலன் தற்போது அஜர்பைஜானில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து இருப்பது ஒட்டுமொத்த படக்குழுவையும் மட்டுமின்றி தமிழ் சினிமாவையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

தொடரும் மாரடைப்பு மரணங்கள்: 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு கலை இயக்குநராக பணியாற்றிய மிலன் 120க்கும் மேற்பட்ட விளம்பரங்களுக்கும் பணியாற்றி உள்ளார். சரவணா ஸ்டோர்ஸ், போத்தீஸ், ஆர்எம்கேவி, ஆச்சி மசாலா, சக்தி மசாலா என அயராது பணியாற்றி உள்ளார். சமீப காலமாக மாரடைப்பு ஏற்பட்டு சினிமா பிரபலங்கள் மரணித்து வருவது அதிகரித்து வரும் நிலையில், இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு மிலன் உயிரிழந்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X