பாரதி கண்ணம்மா சீரியலா?.. விடாமுயற்சி ஃபர்ஸ்ட் லுக்கை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்!
சென்னை: அஜித்தின் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஒரு வழியாக வெளியான நிலையில், அந்த போஸ்டரை பார்த்ததும் நெட்டிசன்கள் பாரதி கண்ணம்மா சீரியலில் ரோஷினி ஹரிப்ரியன் பெட்டியைத் தூக்கிக் கொண்டு ரோடு ரோடாக அலையும் காட்சி தான் கண் முன் வந்து செல்கிறது என பங்கமாக கலாய்க்க ஆரம்பித்துள்ளனர்.
முன்னணி நடிகர்களின் படங்கள் குறித்து எந்தவொரு போஸ்டரோ, டீசரோ அல்லது பாடல்களோ வெளியானால் அதை அந்த நடிகரின் ரசிகர்கள் ரசித்துக் கொண்டாடிக் கொண்டிருந்தால் அந்த நடிகரின் ஹேட்டர்கள் மற்றும் போட்டி நடிகரின் ரசிகர்கள் அது எங்கே இருந்து காப்பி அடிக்கப்பட்டது என்றும் அதை எப்படி ட்ரோல் செய்யலாம் என்றும் சட்டென யோசித்து கலாய்த்து விடுகின்றனர்.

சமீபத்தில் வெளியான விஜய்யின் கோட் ஷாட்ஸ் வீடியோவை அஜித்தின் விவேகம் படத்தின் காட்சியுடன் கம்பேர் செய்து அஜித் ரசிகர்கள் கலாய்த்தனர். இந்நிலையில், விடாமுயற்சி ஃபர்ஸ்ட் லுக்கையும் ட்ரோல் செய்து வருகின்றனர்.
விடாமுயற்சி ஃபர்ஸ்ட் லுக்: லைகா நிறுவனம் தயாரிப்பில் அஜித் குமார், திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக அஜர்பைஜான் நாட்டிலேயே முழுக்க முழுக்க உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சற்று முன் வெளியாகி #VidaaMuyarchiFirstLook என ட்விட்டரையே ஆட்சி செய்து வருகிறது. நடிகர் அஜித் குமாரின் லேட்டஸ்ட் லுக்கை பார்த்த ரசிகர்கள் தல டக்கர்டோய் என கொண்டாடி வருகின்றனர்.
பாரதி கண்ணம்மா ட்ரோல்: விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித்த ரோஷினி ஹரிப்ரியன் நடித்திருந்தார். வீட்டில் இருந்து அவர் கோபத்துடன் பெட்டியை தூக்கிக் கொண்டு வெளியேற அவர் சாலைகளில் நடந்து செல்லும் காட்சிகள் சில நாட்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதை வைத்து ஏகப்பட்ட மீம்கள் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகின. பாலை வனத்தில் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை நடப்பது போலவும், நிலாவில் நடப்பது போலவும் ட்ரோல் செய்தனர். இந்நிலையில், நடிகர் அஜித் நடு ரோட்டில் பெட்டியுடன் நடந்து செல்வதை பார்த்த ரசிகர்கள் பாரதி கண்ணம்மா சீரியலுடன் அதை கம்பேர் செய்து கலாய்த்து வருகின்றனர்.

தீபாவளி, பொங்கல் பரிசு காத்திருக்கு: நெட்டிசன்கள் என்ன தான் கலாய்த்தாலும் அஜித் ரசிகர்களுக்கு இந்த ஆண்டு தீபாவளிக்கு விடாமுயற்சி மற்றும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு குட் பேட் அக்லி என அடுத்தடுத்து பரிசுகள் காத்துக் கொண்டிருக்கின்றன. அதனை முன்னிட்டு அடுத்த அடுத்த அப்டேட்களும் வரவுள்ள நிலையில், சோஷியல் மீடியாவே அஜித் ரசிகர்களின் கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்கும் எனக் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











