Vidamuyarchi BO Day 5: அஜித் குமார் ஹேப்பி.. 100 கோடி கிளப்பில் இணைந்த விடாமுயற்சி.. 5 நாள் வசூல்!

சென்னை: லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ், விஜே ரம்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 6ம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியானது. முதல் நாளில் அஜித் ரசிகர்கள் தியேட்டர்களில் படத்தைக் கொண்டாடிய நிலையில், மிகப்பெரிய ஓபனிங் கிடைத்தது.

ஆனால், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வசூல் குறையத் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தியேட்டர்கள் நிரம்பிய நிலையில், நல்ல வசூல் வந்துள்ளது. ஆனால், மீண்டும் திங்கட்கிழமையான நேற்று வேலை நாள் என்பதால் படத்தின் வசூல் பெருமளவில் சரிந்துள்ளது.

Vidamuyarchi Vidamuyarchi Box office Ajith Kumar

தைப்பூசத்துக்கு தமிழ்நாட்டில் இன்று விடுமுறை நாள் என்பதால் இன்று மீண்டும் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விடாமுயற்சி திரைப்படம் இதுவரை உலகளவில் 100 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது என பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மகிழ் திருமேனி பேட்டி: விடாமுயற்சி படம் வெளியான பின்னர் இயக்குநர் மகிழ் திருமேனி யூடியூப் சேனல்களுக்கு மீண்டும் பேட்டியளித்து வருகிறார். சிலர் வேண்டுமென்றே படத்திற்கு எதிரான நெகட்டிவ் கருத்துக்களை பரப்புகின்றனர். ஆனால், இந்த படத்தின் மூலம் அஜித் குமார் ரொம்பவே ஹேப்பியாகி உள்ளார். லைகா தயாரிப்பு நிறுவனம் மற்றும் படக்குழுவினர் அனைவரும் ஹேப்பி தான். நாங்கள் எதை ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என நினைத்தோமோ அதை சரியாக கொடுத்திருக்கிறோம். உண்மையான அஜித் ரசிகர்களும் படத்தை பாராட்டி வருகின்றனர் என நெகட்டிவ் கருத்துக்களுக்கு எதிராக ஒரே போடாக போட்டுவிட்டார்.

விடாமுயற்சி 5வது நாள் வசூல்: அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் முதல் நாளன்று 26 கோடி ரூபாய் வசூலை இந்தியளவில் ஈட்டியதாக கூறப்படுகிறது. 2வது நாளில் 10.25 கோடி ரூபாயும், 3வது நாளில் 13.5 கோடி ரூபாயும் 4வது நாளில் 12.5 கோடி ரூபாயும் 5வது நாளான நேற்று வெறும் 3 கோடி ரூபாய் மட்டுமே வசூல் வந்துள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தியளவில் 65 கோடி ரூபாய் வசூலை விடாமுயற்சி திரைப்படம் ஈட்டியுள்ளது என்கின்றனர். இதுதொடர்பான எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் லைகா நிறுவனம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

100 கோடி கிளப்பில் விடாமுயற்சி: இந்த ஆண்டு தமிழில் இதுவரை வெளியான எந்தவொரு படங்களும் 100 கோடி வசூலை ஈட்டாத நிலையில், அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது. இந்தியளவில் 65 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ள விடாமுயற்சி திரைப்படம் ஓவர்சீஸில் ஒட்டுமொத்தமாக 40 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியிருப்பதாக கூறுகின்றனர். 105 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை உலகளவில் இந்த படம் அள்ளியிருக்கிறது. 200 கோடி ரூபாய்க்கும் அதிகமான பட்ஜெட்டில் இந்த படம் உருவாகியுள்ளது என்றும் அஜித் குமாரின் சம்பளம் மட்டுமே 105 கோடி என்றும் தகவல்கள் வெளியான நிலையில், 2வது வாரமும் படம் ஓடினால் தான் லாபம் பெறும் என்கின்றனர். ஆனால், காதலர் தினத்தை முன்னிட்டு 9 சிறு பட்ஜெட் படங்கள் படங்கள் இந்த வாரம் விடாமுயற்சி வசூலுக்கு முட்டுக்கட்டை போட ரெடியாகி விட்டன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X