அப்படி போடு.. விடாமுயற்சி வசூல் எகிறப்போகுது.. கடைசி நேரத்தில் க்ரீன் சிக்னல் கொடுத்த அரசு!

சென்னை: 'பத்ம பூஷன்' அஜித் குமாரின் விடாமுயற்சி படத்துக்கு இன்று காலை வரை சிறப்புக் காட்சிக்கான அனுமதி கிடைக்காமல் இருந்து வந்த நிலையில், அஜித் குமார் ரசிகர்கள் ரொம்பவே அப்செட்டில் இருந்தனர். மற்ற மாநிலத்தை சேர்ந்த ஏகே ரசிகர்கள் எல்லாம் விடாமுயற்சி படத்தை அதிகாலையிலேயே பார்த்துவிடுவார்கள். நாம் 12 மணிக்கு மேலத்தான் படத்தை பார்க்க முடியுமா? என புலம்பி வந்த நிலையில், அவர்கள் வயிற்றில் பால் வார்க்கும்படியான செய்தி வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு அரசு அஜித் குமாரின் விடாமுயற்சி படத்துக்கான சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கியுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி அஜித் ரசிகர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

vidamuyarchi ajith kumar

விடாமுயற்சி படத்தின் முதல் நாள் வசூல் குறைவாக இருக்கும் என விஜய் ரசிகர்கள் கலாய்த்து வந்த நிலையில், 9 மணி ஷோவுக்கான அனுமதி கிடைத்த நிலையில், முதல் நாள் வசூல் எப்படி இருக்கும் என்பது குறித்தும் இங்கே பார்க்கலாம் வாங்க..

9 மணிக்கு விடாமுயற்சி: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ் மற்றும் விஜே ரம்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் அஜர்பைஜானில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள விடாமுயற்சி படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். 12 மணிக்குத்தான் பல திரையரங்குகளில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அரசு காலை 9 மணிக்கு சிறப்பு காட்சி போட்டுக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. ரமேஷ் பாலா தனது ட்விட்டர் பக்கத்தில் அதனை ஷேர் செய்துள்ளார்.

vidamuyarchi ajith kumar

அஜித் ரசிகர்கள் ஹேப்பி: காலையிலேயே அஜித் குமாரின் தரிசனத்தை தமிழ்நாட்டு ரசிகர்கள் பார்க்க முடியாதா என புலம்பிக் கொண்டிருந்தவர்களுக்கு தற்போது வெளியான அறிவிப்பு அவர்களை ரொம்பவே ஹேப்பியாக்கி உள்ளது. நாளை காலை முதலே தியேட்டர்களில் டிஜே எல்லாம் வைத்து அலப்பறையை கிளப்ப ரெடியாகி விட்டனர்.

vidamuyarchi ajith kumar

விடாமுயற்சி முதல் நாள் வசூல் கணிப்பு: காலை 9 மணிக்கு சிறப்புக் காட்சிக்கு அனுமதி கிடைத்துள்ள நிலையில், விடாமுயற்சி திரைப்படம் முதல் நாளில் 30 முதல் 35 கோடி வரை வசூல் செய்யும் என கணிப்புகள் வெளியாகி உள்ளன. இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தப் போகும் முதல் படமாக விடாமுயற்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகிழ் திருமேனி படத்தை மட்டும் தாறுமாறாக செதுக்கியிருந்தாலே போதும் படத்தை பெரிய பிளாக்பஸ்டர் ஆக்குவதை ரசிகர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்கின்றனர்.

vidamuyarchi ajith kumar

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X