வெளிநாட்டில் சொந்த வீடு வாங்கிய அஜித்.. மனைவியின் ஆசையை நிறைவேற்றினாரா!
சென்னை: நடிகர் அஜித் வெளிநாட்டில் பிரம்மாண்ட வீடு வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த திரைப்படம் துணிவு கடந்த ஜனவரி மாதம் வெளியானது. மங்காத்தா படத்திற்கு பின் அஜித் இப்படத்தில் கேங்ஸ்டராக நடித்திருந்தார்.
விஜய் நடித்த வாரிசு படத்திற்கு போட்டியாக வெளியான, துணிவு திரைப்படம் கலெக்ஷனை அள்ளியது.

விடாமுயற்சி: துணிவு படத்தை தொடர்ந்து அடுத்து விக்னேஷ் சிவன் படத்தில் அஜித் நடிப்பார் என்று சொல்லப்பட்டது. ஆனால், அஜித்திற்கு கதை பிடிக்காததால், இயக்குநர் மாற்றப்பட்டு, மகிழ் திருமேனி படத்தை இயக்குவார் என்றும், படத்திற்கு விடாமுயற்சி என்றும் பெயர் வைக்கப்பட்டது.
கிணற்றில் போட்ட கல்: விக்னேஷ் சிவனின் வயிற்று எரிச்சலோ என்னவோ தெரிவில்லை. படம் குறித்து தகவல் வெளியாகி 8 மாதமாக பேச்சுவார்த்தை நடைபெற்றுவரும் நிலையில், இதுவரைக்கும் படம் குறித்த எந்தவிதமான பேச்சுவார்த்தையிலும் அஜித் கலந்துகொள்ளவில்லை. அஜித்தின் போட்டியாளராக கருதப்படும் விஜய்யோ இந்த இடைவெளியில் லியோ படத்தை முடித்துவிட்டு அடுத்து வெங்கட்பிரபு இயக்கவுள்ள படத்தின் வேலையையும் துவங்கிவிட்டார். ஆனால், விடாமுயற்சி திரைப்படம் கிணற்றில் போட்ட கல்லாகவே உள்ளது.
துபாயில் படப்பிடிப்பு: அஜித் பைக்கை எடுத்துக்கொண்டு நாடு நாடாக சென்று இதுவரை பிடி கொடுக்காமலே இருந்தார். இப்போதுதான் எல்லா பிரச்சனையும் முடிந்து ஒரு முடிவு எட்டப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் இறுதியில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் அஜித் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவிருக்கிறார். தொடர்ந்து 3 மாதங்களுக்கும் மேல் துபாயில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத்தப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
சொந்த வீடு: இந்நிலையில், நடிகர் அஜித் துபாயில் சொந்தமாக ஒரு பெரிய வீட்டை வாங்கி உள்ளதாகவும், விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு துபாயில் நடைபெறும் போது தனது சொந்த வீட்டில் இருந்தே அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. இதை கேள்விப்பட்ட பேன்ஸ் இதுக்குத்தான் இத்தனை நாள் பைக் டூர் போனாரா என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











