தீபாவளிக்கு விடாமுயற்சி வருமா வராதா?.. கங்குவா vs வேட்டையன் மோதலை தவிர்க்க சான்ஸ் இருக்கே!
சென்னை: லைகா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசாண்ட்ரா மற்றும் ஆரவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என கடந்த ஆண்டை போலவே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்னமும் அந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடையவில்லை.
கடந்த 6 மாதங்களாக படத்திற்கான பட்ஜெட் ஒதுக்கப்படாமல் இருந்த நிலையில், படப்பிடிப்பு தொடங்காமல் படக்குழு அமைதி காத்து வந்த நிலையில், அஜித் குமார் குட் பேட் அக்லி படத்தை ஆரம்பித்து விட்டார். அதனால் அவசர அவசரமாக மீண்டும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை லைகா ஆரம்பித்த நிலையில், இந்த ஆண்டு தீபாவளிக்கு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், திடீரென ஷாலினிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில், நடிகர் அஜித் குமார் சென்னைக்கு விரைந்துள்ள நிலையில், திட்டமிட்டப்படி விடாமுயற்சி தீபாவளிக்கு வராது என தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
மகிழ் திருமேனி மீது பிரஷர்: தடம், தடையற தாக்க, மீகாமன், கலகத் தலைவன் படங்களை இயக்கிய மகிழ் திருமேனிக்கு விடாமுயற்சி படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்க ரொம்பவே சந்தோஷப்பட்டார். ஆனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அந்த படத்திற்காக கஷ்டப்பட்டு அவர் உழைத்து வந்தாலும், கடைசி நேரத்தில் ஃபாஸ்ட் ஃபுட் கடையில் ஃபிரைட் ரைஸ் கேட்பது போல அவரை அர்ஜெண்ட் பண்ணினால் விடாமுயற்சி எதிர்பார்த்த அளவுக்கு வராது என சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. அவரும், தனது படைப்பை தரமான படைப்பாக கொடுக்க வேண்டும் என்பதற்காக பார்த்து பார்த்து செதுக்கி வரும் நிலையில், எவ்வளவு பிரஷர் வந்தாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் படத்தை சிறப்பாகவே கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
குட் பேட் அக்லிக்கும் நெருக்கடி: பொங்கல் ரிலீஸ் என மைத்ரி மூவி மேக்கர்ஸ் குட் பேட் அக்லி படத்துக்கும் தேதி குறிப்பிட்டுள்ள நிலையில், அனைவருக்கும் நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது என்கின்றனர். அஜித் குமார் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிப்பாரா? அல்லது விடாமுயற்சி படத்தை முடிப்பாரா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.
தீபாவளிக்கு விடாமுயற்சி வருமா?: அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் தீபாவளிக்கு வருவது சந்தேகம் தான் என தற்போது சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. பொங்கலுக்கு குட் பேட் அக்லி படம் வரவேண்டும் என்றால் விடாமுயற்சி படத்தை கிறிஸ்துமஸ் ரிலீஸாக வெளியிட்டால் கூட சிக்கல் இருக்காது என்கின்றனர்.
வேட்டையன் தீபாவளி: கங்குவா மற்றும் வேட்டையன் ஆயுத பூஜைக்கு போட்டிப் போடவுள்ள நிலையில், விடாமுயற்சி தீபாவளி ரேஸில் இருந்து பின் வாங்கினால் வேட்டையன் படத்தை லைகா நிறுவனம் தீபாவளிக்கு கொண்டு வரவும் வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறுகின்றனர். ஏற்கனவே இந்தியன் 2 ஜூன் ரிலீஸ் ஆகும் என அறிவித்து விட்டு கடைசியில் கல்கி படத்திற்காக ஜூலை 12ம் தேதி இந்தியன் 2 தள்ளிப் போன நிலையில், லைகா நிறுவனம் வேட்டையன் ரிலீஸ் தேதியையும் கடைசி நேரத்தில் மாற்ற வாய்ப்புகள் அதிகம் என்றே கூறுகின்றனர். ஆனால், அதற்குள் விடாமுயற்சி ஷூட்டிங் முடிந்து தீபாவளிக்கு வரும் நிலை வந்தால் வேட்டையன் ஆயுத பூஜைக்கே ரிலீஸ் ஆகும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











