Vidamuyarchi Positive Review: 'க்ரே டைவர்ஸ்’ பற்றி பேசிய விடாமுயற்சி.. இவ்ளோ பாசிட்டிவ் இருக்கா?

சென்னை: கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ் சினிமாவில் பல பிரபலங்கள் திடீரென விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், விடாமுயற்சி படத்தில் அந்த விஷயத்தை டீப்பாக வைக்க மகிழ் திருமேனிக்கு உத்தரவிட்டுள்ளார் அஜித் குமார். ஹாலிவுட்டில் வெளியான பிரேக்டவுன் படத்தில் இல்லாத பல விஷயங்களையும் இந்த படத்தில் அழகாக கோர்த்து படமாக்கியுள்ளார்.

காதலித்து திருமணம் செய்துக் கொள்பவர்கள் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஏன் பிரிகின்றனர். அவர்களுக்குள் என்னவெல்லாம் பிரச்சனை ஏற்படுகிறது. அதை எப்படி ஜென்டில்மேன் தனமாக டீல் செய்வது என பக்காவாக ஹாலிவுட் தரத்தில் இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார்.

vidamuyarchi vidamuyarchi review grey divorce

தமிழ் சினிமா பிரபலங்களும் திருமணமான தம்பதியினர் அனைவரும் இந்த படத்தை தாராளமாக இந்த காரணத்திற்காகவே பார்க்கலாம். மேலும், இந்த படத்தில் வயலென்ஸ் காட்சிகளிலும் மகிழ் திருமேனி மற்றும் அஜித் குமார் கையாண்டுள்ள விஷயமும் உற்று நோக்க வேண்டியவை என்பது குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..

தரமான மேக்கிங்: லைகா நிறுவனம் அஜித்துக்கு 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பளம் கொடுத்து மொத்தமாக 200 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ், வெளிநாட்டில் படப்பிடிப்பு, அனிருத் இசை என அனைத்துமே ஹை பட்ஜெட்டில் தரமான மேக்கிங்குடன் பிரேக்டவுன் படத்தை விட அட்டகாசமான விஷுவல் ட்ரீட்டுடன் இந்த விடாமுயற்சி படம் வெளியாகி இருக்கிறது.

vidamuyarchi vidamuyarchi review grey divorce

க்ரே டைவர்ஸ்: வெளிநாடுகளில் தம்பதிகளை பாதித்து வந்த க்ரே டைவர்ஸ் இந்தியாவில் பல பிரபலங்களின் வாழ்க்கையை பாதித்து வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் பல முன்னணி நடிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அடுத்தடுத்து விவாகரத்து அறிவிப்புகளை வெளிப்படையாக அறிவித்து வரும் நிலையில், அவர்களுக்கு அட்வைஸ் செய்யும் விதமாக இந்த படத்தை அஜித் குமார் கொடுக்க முயற்சித்திருப்பதே மிகப்பெரிய பாசிட்டிவான விஷயம் தான்.

தம்பதியினருக்கு அட்வைஸ்: தனுஷ், ஜெயம் ரவி, ஏ.ஆர். ரஹ்மான், ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் குழந்தைகள் எல்லாம் பெற்றெடுத்த நிலையிலேயே விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். ஆனால், இங்கே த்ரிஷாவுக்கு ஏற்படும் மிஸ் கேரேஜ் விவாகரத்துக்கு வழிவகுப்பதாக படத்தில் காட்டியுள்ளனர். ஆனால், அதுமட்டுமே காரணம் இல்லை என்றும் காதலிக்கும் போது காட்டப்படும் அன்பும் அக்கறையும் குறையும் இடத்தில் தான் மற்றொரு காதலை தேடி நகரும் சூழல் உருவாகிறது என்பதை அழுத்தமாகவும் ஆழமாகவும் மகிழ் திருமேனி விடாமுயற்சி படத்தின் மூலம் பாடம் நடத்தியிருக்கிறார்.

vidamuyarchi vidamuyarchi review grey divorce

ரெஜினா கசாண்ட்ரா கதாபாத்திரம்: ஹிஸ்டரி ஆஃப் வயலென்ஸ் படத்தில் இல்லாத விஷயங்களை லியோ படத்தில் 2ம் பாதியில் லோகேஷ் கனகராஜ் உருவாக்கி இருப்பார். அதே போல, பிரேக்டவுன் படத்தில் இல்லாத மேட்டராக ரெஜினா கசாண்ட்ராவின் சைக்கோத்தனம் எழுதப்பட்டுள்ள விதமும் காட்சிப்படுத்தப்பட்ட விதமும் ரசிகர்களை பகீர் அடையச் செய்கிறது. த்ரிஷாவை விட இவருக்குத்தான் இந்த படத்தில் அதிக முக்கியத்துவம் உள்ளது.

கார் ஸ்டன்ட் கலக்கல்: அஜித் குமார் மற்றும் ஆரவ் விபத்துக்குள்ளாகும் காட்சி வெளியாகி ரசிகர்களை அதிர வைத்த நிலையில், அந்த கார் ஸ்டன்ட் காட்சி மொத்தமே கலக்கலாக அமைந்திருந்தது. ஓம் பிரகாஷின் கேமரா வொர்க் அந்த சீனில் ஹைலைட். ஸ்டண்ட் இயக்குநர் அஜித் குமாரின் தலையை கார் டோருக்கு வெளியே கொண்டு வந்து கல்லில் இடிக்க வருவது போல காட்டி, அங்கிருந்து ரசிகர்களை திகிலடைய செய்யும் விதமாக நடத்தப்பட்ட விபத்துக் காட்சிகள் எல்லாமே வொர்த்.

vidamuyarchi vidamuyarchi review grey divorce

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X