விலகி ஓடிய விடாமுயற்சி.. ஷங்கருடன் மோத தயாரான சியான் விக்ரம்.. பொங்கல் ரேஸில் வீர தீர சூரன்?

சென்னை: குட் பேட் அக்லி படத்தை ஓவர்டேக் செய்துவிட்டு விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வருவோம் என அறிவிப்புகளை வெளியிட்டு வந்த நிலையில், ஆதிக் ரவிச்சந்திரனே அப்செட் ஆகி முதலில் பொங்கலுக்கு விடாமுயற்சி வருது, அதை பாருங்க, அடுத்து தான் நம்ம படம் என சொல்லியிருந்தார். ஆனால், தற்போது விடாமுயற்சி பொங்கலுக்கு வரப்போவதில்லை என்கிற அறிவிப்பு அஜித் ரசிகர்களை ரொம்பவே பாதிக்க செய்துள்ளது.

சிவகார்த்திகேயனின் அமரன் படத்தின் வசூல் சாதனையை எல்லாம் பொங்கல் விடுமுறை நாட்களை கணக்கிட்டு முறியடித்துவிடலாம் என அஜித் ரசிகர்கள் போட்ட கணக்கை எல்லாம் லைகா நிறுவனம் போஸ்ட்போன் செய்து சுக்கு நூறாக உடைத்துவிட்டதாக அஜித் ரசிகர்கள் தங்கள் ஏமாற்றங்களை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

veera dheera sooran vidamuyarchi

விடாமுயற்சி விலகி ஓடிய நிலையில், கேம் சேஞ்சர் படத்துக்கு கூடுதல் அட்வாண்டேஜ் என சொல்லப்பட்டு வரும் நிலையில், சியான் விக்ரமின் வீர தீர சூரன் படம் பொங்கலுக்கு வர அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வணங்கான் படமும் டவுட்டு?: கடந்த ஆண்டு பொங்கலுக்கும் தமிழ் சினிமாவில் அஜித், விஜய் படங்கள் வெளியாகவில்லை. இந்த ஆண்டு எப்படியும் அஜித் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த 2 லட்டும் இல்லை பிம்பிலிக்கி பிலாப்பி என ஏமாற்றிவிட்டனர். இந்நிலையில், பாலாவின் வணங்கான் படமும் பொங்கலுக்கு திட்டமிட்டு வருமா? என்பது சந்தேகம் தான் எனக் கூறுகின்றனர்.

கேம் சேஞ்சருக்கு ஜாக்பாட்: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் தமிழ்நாட்டை தவிர்த்து மற்ற இடங்களில் சிறப்பான வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது விடாமுயற்சி படம் விலகிய நிலையில், கேம் சேஞ்சர் படத்துக்கு அடித்தது ஜாக்பாட் என ராம்சரண் ரசிகர்கள் சந்தோஷத்தில் மிதந்து வருகின்றனர்.

வீர தீர சூரன் வருமா?: விடாமுயற்சி படம் பொங்கல் போட்டியில் பங்கேற்காத நிலையில், குடியரசு தினத்தை குறிவைத்துக் காத்து நிற்கும் சியான் விக்ரமின் வீர தீர சூரன் படத்தை பொங்கலுக்கு விட வேண்டும் என ரசிகர்கள் #VeeraDheeraSooran ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். இந்த வாய்ப்பை சியான் விக்ரம் சரியாக பயன்படுத்திக் கொள்வாரா? அல்லது ஷங்கருடன் மோத தயங்குவாரா? என்கிற கேள்விகளும் ரசிகர்களை குழப்பி வருகின்றன. சீக்கிரமே வீர தீர சூரன் படக்குழு ரிலீஸ் தேதியை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X