ஓடிப்போன வீர தீர சூரன்.. இந்த மாதமே தனுஷ் படம் ரிலீஸ்.. எல்லாத்துக்கும் யாரு காரணம் தெரியுமா?
சென்னை: கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கே தங்கலான் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 15ம் தேதி தான் அந்த படம் வெளியானது. ஓடிடி ரிலீஸும் பல மாதங்கள் தாமதமாக வெளியாகி ரசிகர்களை கடுப்பாக்கியது. இந்நிலையில், இந்த ஆண்டு பொங்கலுக்கு விடாமுயற்சி படம் பின் வாங்கிய நிலையில், தயார் நிலையில் இருக்கும் விக்ரமின் வீர தீர சூரன் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வரவில்லை.
ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தை குறிவைத்து அந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மார்ச் மாதத்துக்கு படத்தின் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், ஜனவரி 30ம் தேதி தனுஷின் படம் ரிலீஸாகப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

அஜித் குமாரின் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தள்ளிப் போன நிலையில், பல படங்களின் ரிலீஸ் தேதியில் அதிரடி மாற்றங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
விடாமுயற்சி ரிலீஸ் தேதி: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா நடிப்பில் உருவாகி உள்ள விடாமுயற்சி திரைப்படம் அடுத்த மாதம் பிப்ரவரி 6ம் தேதி வெளியாக உள்ள நிலையில், காதலர் தினத்தை குறிவைத்து காத்திருந்த சில படங்கள் இந்த மாதமே வெளியாக தொடங்கி உள்ளன. ரவியின் காதலிக்க நேரமில்லை, ஆகாஷ் முரளியின் நேசிப்பாயா உள்ளிட்ட படங்கள் பொங்கலுக்கு வெளியான நிலையிலும் ரசிகர்களை கவரவில்லை. இந்நிலையில், காதலர் தினத்தை டார்கெட் செய்திருந்த இன்னொரு படமும் இந்த மாதமே வெளியாகிறது.
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்: நடிகர் தனுஷ் இயக்கத்தில் அவரது அக்கா மகன் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர் உள்ளிட்ட இளைஞர்கள் நடித்துள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் வரும் ஜனவரி 30ம் தேதி வெளியாகும் என அப்டேட்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே அந்த படத்தில் இருந்து ஜி.வி. பிரகாஷ் இசையில் வெளியான கோல்டன் ஸ்பேரோ உள்ளிட்ட பாடல்கள் ஹிட் அடித்த நிலையில், பவிஷ்ஷுக்கு இது பக்காவான அறிமுகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தில்லான டிராகன்: அஜித் குமாரின் விடாமுயற்சி பிப்ரவரி 6ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதற்கு அடுத்து பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தை சரியாக டார்கெட் செய்து பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படம் வெளியாகிறது. நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் இந்த மாதம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், அந்த படத்திற்கான புரமோஷன் வேலைகளை தனுஷ் தொடங்கிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











