விடாமுயற்சி படத்துக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த விமர்சனத்தை பார்த்தீங்களா?.. டிரெண்டாகும் போஸ்ட்!

சென்னை: அஜித் குமாரின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க வேண்டிய நிலையில், கடைசி நேரத்தில் அவர் அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டு மகிழ் திருமேனி உள்ளே வந்தார். அஜித்தின் 62வது படமான விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி தன்னுடைய ஸ்டைலில் இயக்கியுள்ளார். நேற்று வெளியான அந்த படத்துக்கு கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

இந்த படம் அஜித் படமாகவும் இல்லை என்றும் தடம், தடையற தாக்க படங்களை எடுத்த மகிழ் திருமேனி படம் போல இல்லை என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அஜித் குமார் பிரேக் டவுன் படத்தை தழுவி எடுக்க மகிழ் திருமேனியிடம் சொல்லாமல், புதிய கதையை பண்ண சொல்லியிருந்தால், நிச்சயம் தியேட்டர்களை தெறிக்கவிட்டு இருப்பார். மீண்டும் அவருடன் அஜித் குமார் இணைந்து படம் பண்ண வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

vidamuyarchi vignesh shivan ajith kumar

விக்னேஷ் சிவன் போட்ட இன்ஸ்டா ஸ்டோரி விடாமுயற்சி படத்துக்கு எதிரான கருத்தை கொண்டுள்ளதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வந்த நிலையில், விடாமுயற்சி படத்துக்கான விமர்சனத்தையே விக்னேஷ் சிவன் தற்போது இன்ஸ்டா ஸ்டோரியில் வைத்துள்ளார்.

அஜித்தின் ரசிகர்: இயக்குநர் விக்னேஷ் சிவனும் அஜித்தின் தீவிர ரசிகர் தான். எந்தவொரு படம் வந்தாலும் முதல் நாளே தியேட்டருக்கு கிளம்பிப் போய் படத்தை பார்த்துவிடுவார். நேற்று வெளியான விடாமுயற்சி படத்தையும் முதல் நாளே பார்த்த விக்னேஷ் சிவன் அந்த படத்தை பாராட்டி பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரி தற்போது சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது.

விக்னேஷ் சிவன் பாராட்டு: "விடாமுயற்சி திரைப்படம் இன்டென்ஸான த்ரில்லர் படமாக உள்ளது. புதிர்களை சால்வ் பண்ணும் விதமாக ஏகப்பட்ட ட்விஸ்டுகளையும் திருப்பங்களையும் வைத்து இயக்குநர் மகிழ் திருமேனி கொடுத்துள்ளார். அஜித் குமாரின் பிரெசன்ஸ் படம் முழுவதும் ஒவ்வொரு ஃபிரேமிலும் தாறுமாறாக உள்ளது. அனிருத்தின் பின்னணி இசையில் அவர் நடந்து வரும் காட்சிகளும், ஸ்டன்ட் செய்யும் காட்சிகளும் மிரட்டுது. ஓம் பிரகாஷ் மற்றும் நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் பலம். த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா மற்றும் ஆரவ் என அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர். லைகா நிறுவனத்துக்கு மிகப்பெரிய வெற்றிப் படம் கிடைத்திருக்கிறது வாழ்த்துகள்" என பதிவிட்டுள்ளார்.

உங்களுக்கும் சான்ஸ் கிடைக்கும்: விடாமுயற்சி படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனத்தை விக்னேஷ் சிவன் பதிவிட்ட நிலையில், கவலைப்படாதீங்க விக்னேஷ் சிவன் உங்களுடைய விடாமுயற்சி காரணமாக கூடிய சீக்கிரமே நீங்களும் அஜித் சாரை வைத்து ஒரு படம் பண்ணும் வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும் என அஜித் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

vidamuyarchi vignesh shivan ajith kumar

விக்னேஷ் சிவன் படம் எப்போ வரும்?: ஏகே 62 படத்தின் வாய்ப்பை இழந்த பின்னர், பிரதீப் ரங்கநாதனை வைத்து விக்னேஷ் சிவன் ஆரம்பித்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படமும் ரொம்ப காலதாமதம் ஆகிக் கொண்டே போகிறது. பிரதீப்பின் அடுத்த படமான டிராகன் திரைப்படம் இந்த மாதம் வெளியாகவுள்ள நிலையில், விக்னேஷ் சிவனின் LIK படத்தின் ரிலீஸ் அப்டேட்டையும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இந்த ஆண்டு சம்மருக்கு அந்த படம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X