Sawadeeka: விடாமுயற்சி ‘சவதீகா’ வீடியோ சாங் வந்துடுச்சு.. அஜித் டான்ஸ் பார்த்து ஆட்டம் போட ரெடியா?

சென்னை: லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ் மற்றும் விஜே ரம்யா நடிப்பில் கடந்த பிப்ரவரி 6ம் தேதி வெளியான விடாமுயற்சி படத்தின் 'சவதீகா' பாடல் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டு அஜித் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

விடாமுயற்சி படத்தில் ரசிகர்களை உற்சாக மனநிலைக்கு கொண்டு செல்ல ஆரம்பத்திலேயே அனிருத் செய்த தரமான சம்பவம் தான் இந்த பாடல். உடல் எடையை குறைத்து ரேஸுக்காக தயாரான அஜித் குமார் கடைசி நேரத்தில் அதே லுக்கில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி உள்ளிட்ட படங்களில் நடித்த நிலையில், சவதீகா பாடலை கடைசியாக எடுத்தாலும் படத்திற்கு அதுவே முதல் புரமோஷனாக மாறியது.

Ajith Kumar Vidamuyarchi Sawadeeka

வேட்டையன் படத்தில் எப்படி ஆரம்பத்திலேயே மனசிலாயோ பாடல் வந்து ரஜினிகாந்த் ரசிகர்களை ஆட்டம் போட வைத்ததோ அதே போல இந்த சவதீகாவும் அஜித் ரசிகர்களை வைப் ஆக்கியது.

Ajith Kumar Vidamuyarchi Sawadeeka

சவதீகா வீடியோ பாடல் ரிலீஸ்: அனிருத் இசையமைத்து பாட அவருடன் அந்தோனி தாசனும் இணைந்து குரல் கொடுக்க அறிவு எழுதிய பாடல் வரிகள் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்தன. நடிகர் அஜித் குமார் கோட் சூட் அணிந்துக் கொண்டு மணமகனாக என்ட்ரி கொடுக்க அழகு பதுமையாக த்ரிஷா ஆட்டம் போட்ட சவதீகா பாடலின் லிரிக் வீடியோவே ரசிகர்களை இதுவரை வைப் செய்ய வைத்த நிலையில், இன்று முதல் சவதீகா வீடியோ பாடல் யூடியூப் டிரெண்டிங்கை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமர்க்களப்படுத்திய அனிருத்: தியேட்டருக்கு அஜித்தின் விடாமுயற்சி படம் பார்க்க வந்த ரசிகர்கள் இன்னும் கொஞ்ச நேரத்தில் அஜர்பைஜான் ரோட்டில் மாட்டிக் கொண்டு திக்குமுக்காட போகின்றனர் என்பதை புரிந்துக் கொண்டு அதற்கு முன்னதாக ரசிகர்களை ஆட்டம் போட வைக்க தரமான சம்பவமாக இந்த பாடலை ஆரம்பத்திலேயே கொடுத்து அமர்க்களப்படுத்தியிருந்தார் அனிருத்.

அஜித்தின் ஆட்டம்: ஆலுமா டோலுமா பாட்டுக்குப் பிறகு அனிருத் அஜித்துக்கு செய்த அட்டகாசமான விஷயமாக இந்த சவதீகா பாடல் மாறியுள்ளது. உடல் எடையை கணிசமாக குறைத்து செம ஸ்லிம்மான அஜித் குமார் இந்த பாடலுக்கு த்ரிஷாவுடன் இணைந்து போட்ட ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலும் மனுஷன் என்னம்மா க்யூட்டா ஆடுறாரு என பார்க்க வைத்தது. அடுத்து குட் பேட் அக்லி படத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் என்னவெல்லாம் ஸ்பெஷல் ஐட்டங்களை இறக்க காத்திருக்கிறாரோ என்பதை காண ரசிகர்கள் ஏப்ரல் 10ம் தேதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். டீசர் வரும் 28ம் தேதி சரவெடியாக வெளியாக போகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X