Vidamuyarchi Teaser: அர்த்தராத்திரியில் அஜர்பைஜான் அஜித் தரிசனம்.. விடாமுயற்சி டீசர் எப்படி இருக்கு?
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி உள்ள விடாமுயற்சி படத்தின் டீசர் ஒரு வழியாக இன்று 11:08 மணிக்கு வெளியாகி அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் கடந்த 2 ஆண்டுகளாக அஜித்தின் விடாமுயற்சி படம் ஏகப்பட்ட தடைகளை தாண்டி உருவாகி வருகிறது.
விடாமுயற்சி படம் முதலில் வருமா? அல்லது குட் பேட் அக்லி படம் முதலில் வருமா? என்கிற அளவுக்கு போட்டிகள் வெடித்து வந்த நிலையில், விடாமுயற்சி படத்தின் டீசர் குட் பேட் அக்லி படத்தை முந்திக்கொண்டது.

லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக கடைசி வரை எந்தவொரு அறிவிப்பும் வெளியிடாத நிலையில், சுரேஷ் சந்திரா சற்றுமுன் விடாமுயற்சி டீசர் அப்டேட்டை உறுதிப்படுத்தினார். சன் டிவி யூடியூப் சேனலில் அஜர்பைஜானில் அஜித் மிரட்டிய விடாமுயற்சி படத்தின் டீசர் வெளியான நிலையில், அதனை டிரெண்ட் செய்யும் முயற்சியிலும் இரவு முழுக்க உறங்காமல் அதிக வியூஸ் ரெக்கார்டு படைக்கும் முயற்சியிலும் ஏகே ரசிகர்கள் இறங்கியுள்ளனர்.
வெளியானது விடாமுயற்சி டீசர்: அஜித் ரசிகர்களுக்கே கடைசி வரை இன்று விடாமுயற்சி டீசர் வெளியாகும் என்கிற நம்பிக்கை பெரிதும் இல்லை. ஆனால், கடைசி நேரத்தில் வெளியான உறுதியான தகவல்களால் இரவு முழுக்க காத்திருந்தனர். 11:08 மணிக்கு ஷார்ப்பாக அஜர்பைஜான் அஜித் தரிசனம் கிடைத்த நிலையில், அஜித் ரசிகர்கள் செம ஹேப்பியாகி உள்ளனர். மகிழ் திருமேனி அஜித்தை வைத்து தரமான சம்பவம் செய்துள்ளார் என சோஷியல் மீடியாவே தெறிக்கிறது.
விடாமுயற்சி டீசர் எப்படி இருக்கு?: 1997ம் ஆண்டு கர்ட் ரசல் நடிப்பில் வெளியான பிரேக்டவுன் ஹாலிவுட் படத்தை தழுவித்தான் இந்த விடாமுயற்சி படம் உருவாக்கப்பட்டு வருவதாக ஏகப்பட்ட தகவல்கள் வெளியான நிலையில், டீசரை பார்க்கும் போது கூட அப்படித்தான் இருக்கிறது. அஜித், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா கேங் த்ரிஷாவை கடத்திச் செல்ல தனது மனைவியை மீட்க அஜித் செய்யும் விடாமுயற்சி தான் இந்த படத்தின் கதையாக இருக்கும் என தெரிகிறது.
உன்னை நம்பு: "எல்லோரும் எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு" என அட்டகாசமான வரிகளுடன் விடாமுயற்சி படத்தின் டீசர் ஹாலிவுட் பட தரத்துக்கு உருவாக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் ஹிஸ்டரி ஆஃப் வயலென்ஸ் படத்தை இன்ஸ்பயர் செய்து லியோ படத்தை உருவாக்கி மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்திய நிலையில், அதே பாணியில் விடாமுயற்சியும் ஹாலிவுட் படத்தின் இன்ஸ்பிரேஷனாக இருக்கும் என்கின்றனர்.
பொங்கல் ரிலீஸ்: குட் பேட் அக்லி பொங்கல் ரிலீஸ் ஆகும் என மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிவித்து வந்த நிலையில், அஜித் குமார் முதலில் விடாமுயற்சி படம் வரட்டும் என முடிவு செய்து அந்த படத்தின் பேட்ச் வொர்க்கையும் முடித்த நிலையில், தற்போது பொங்கல் 2025ம் ஆண்டு விடாமுயற்சி தான் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ள வணங்கான், எதிர்பார்க்கப்படும் வீர தீர சூரன் உள்ளிட்ட படங்கள் அஜித்தின் விடாமுயற்சி படத்துடன் மோதுவார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்துக்கு மிகப்பெரிய சிக்கலை விடாமுயற்சி உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications