பிப்ரவரியில் வெளியாகும் திரைப்படங்கள்.. விடாமுயற்சி முதல் சாவா வரை.. ஹிட்டடிக்கும் படம் எது!
சென்னை: கடந்த வாரம் தியேட்டரில் நக்கலைட்ஸ்' யூடியூப் புகழ் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் நடித்த குடும்பஸ்தன் திரைப்படம் 24ந் தேதி தியேட்டரில் வெளியானது. ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்த மணிகண்டன் கடனை வாங்கிக் கொண்டு எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார் என்பதை இயக்குநர் அழகாக காட்டி இருந்தார். இந்த படத்தைத் தொடர்ந்து, பாட்டில் ராதா: பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிப்பில் குருசோமசுந்தரம் நடிப்பில் உருவாகியுள்ள பாட்டில் ராதா படமும் நல்ல விமர்சனத்தை பெற்றது. இதையடுத்து, இந்த வாரம் தியேட்டரில் வெளியாக உள்ள படங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
விடாமுயற்சி: இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா மற்றும் ஆரவ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விடாமுயற்சி திரைப்படம் வருகிற 6ஆம் தேதி 900க்கும் மேற்பட்ட தியேட்டரில் வெளியாகி உள்ளது.

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்: நடிகர் தனுஷ் இயக்கத்தில் இட்லி கடை படம் மட்டுமின்றி நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் அவர் இயக்கியிருக்கிறார். அதில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். மேலும், விஸ்வாசம் படம் மூலம் பிரபலமடைந்த அனிகா சுரேந்திரன், ப்ரியா வாரியர், மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இளைஞர்களின் காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாகி உள்ள இப்படம் இந்த மாதம் வெளியாக உள்ளது.
டிராகன்: ஓ மை கடவுளே படத்திற்கு பிறகு அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் டிராகன். மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். ஏ.ஜி.எஸ். தயாரிக்கும் இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், கே.எஸ். ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், அனுபமா பரமேஸ்வரன், கயடு லோஹர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் பிப்ரவரி 21ந் தேதி வெளியாகி உள்ளது.
காதல் என்பது பொதுவுடமை: இயக்குனர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் லிஜோமோல், வினித், ரோகிணி, கலேஷ், தீபா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் காதல் என்பது பொதுவுடமை. காதலுக்குள் மிகமுக்கியமான உளவியல் சிக்கலை பேசும் படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில், நடிகர் வினித் பல வருடங்களுக்குப்பிறகு நடித்திருக்கிறார். இப்படத்தின் டிரைலரை அனைவரும் பாராட்டிய நிலையில் இப்படம் பிப்ரவரி 14 ல் வெளியாக உள்ளது.
தண்டேல்: நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடித்த தண்டேல் திரைப்படம் பிப்ரவரி 7ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. இப்படத்தில், சாந்தூ மொண்டெட்டி இயக்கி இருக்கும் இப்படத்தை பன்னி வாசு தயாரித்து அல்லு அரவிந்த் வெளியிடுகிறார். இப்படத்தில், நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்த மீனவர், மீன்பிடிப் பயணத்தின் போது தற்செயலாக பாகிஸ்தான் கடற்பரப்பில் சிக்கிக்கொள்கிறார். அவர் எப்படி அதில் இருந்து தப்பிக்கிறார் என்பது தான் படத்தின் கதை, இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருக்கிறார்.
சாவா: சத்ரபதி சாம்பாஜி மகாராஜின் புராணக்கதையான சாவா படம் வரும் பிப்ரவரி 14ந் தேதி வெளியாக உள்ளது.லக்ஷ்மன் உடேகர் இயக்கி உள்ள இப்படத்தில் விக்கி கவுசல், ராஷ்மிகா மந்தனா, நாயகி. அக்ஷய் கன்னா, அசுதோஷ் ராணா, திவ்யா தத்தா என பலர் நடித்துள்ளனர். சத்ரபதி சாம்பாஜி மகாராஜின் புராணக்கதையில் விக்கி கவுஷல் மராட்டிய மன்னராக நடித்து இருக்கிறார். மன்னரின் மனைவி மகாராணி யேசுபாய் வேடத்தில் ராஷ்மிகா நடிக்கிறார். அண்மையில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி பாராட்டை பெற்றது.


Click it and Unblock the Notifications











