VidaaMuyarchi: ப்ரீ ரிலீஸ் பிசினஸில் அசத்தும் விடாமுயற்சி.. கோடிகளில் விலை போன OTT, Satellite ரைட்ஸ்

சென்னை: அஜித் நடித்து வரும் விடாமுயற்சி ஷூட்டிங் துபாயில் நடைபெற்று வருகிறது.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் தற்போது தான் தொடங்கியுள்ள நிலையில், ப்ரீ ரிலீஸ் பிஸினஸ் முடிந்துவிட்டதாம்.

அதன்படி, விடாமுயற்சி ஓடிடி, சட்டிலைட் ரைட்ஸ் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

 Vidamuyarchi: Vidamuyarchi Digital And Satellite Rights Sold Out

விடாமுயற்சி ஓடிடி, சாட்டிலைட் ரைட்ஸ்: அஜித்தின் 62வது படமான ஏகே 62, 'விடாமுயற்சி' என்ற டைட்டிலில் உருவாகி வருகிறது. லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங், அஜர்பைஜான் நாட்டில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தீபாவளி பிரேக் கூட இல்லாமல் தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது. ஆக்‌ஷன் ஜானரில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

அஜித்துடன் த்ரிஷா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். விடாமுயற்சி படத்தை ஓரிரு ஷெட்யூலில் முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம். அதனால், முதலில் வெளிநாட்டில் நடக்கும் படப்பிடிப்பை முடித்துவிட்டு, பின்னர் சென்னை திரும்ப பிளான் செய்துள்ளனர். இந்தப் படம் 2024 சம்மர் ஸ்பெஷலாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், விடாமுயற்சி ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருவதால், படத்தின் ப்ரீ ரிலீஸ் பிஸினஸை படக்குழு தொடங்கிவிட்டதாம். அதன்படி, ஓடிடி ரைட்ஸ், சாட்டிலைட் ரைட்ஸ் இரண்டுமே முடிந்துவிட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விடாமுயற்சி ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல், சாட்டிலைட் உரிமையை சன் டிவி வாங்கியுள்ளதாம். ஓடிடி, சாட்டிலைட் உரிமை இரண்டுமே பல கோடிகளில் விற்பனையாகியுள்ளதாகத் தெரிகிறது. அதாவது இந்த இரண்டின் மூலமே 100 முதல் 150 கோடி வரை பிஸினஸ் நடந்துள்ளதாக கோலிவுட் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அஜித்தின் துணிவு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 350 கோடிக்கும் மேல் வசூலித்தது.

அதேபோல், ஓடிடியிலும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. இதனால், விடாமுயற்சி படத்திற்கும் அதேபோன்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதனடிப்படையில் தான் விடாமுயற்சி ப்ரீ ரிலீஸ் பிஸினஸ் 100 கோடிக்கும் அதிகமாக நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X